உடம்பு முடியாத நிலையிலும் ப்ரோமோஷன் பண்றாரே சமந்தா.. ஆனால், நம்ம அஜித்.. வம்பிழுத்த நெட்டிசன்கள்!

சென்னை: மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா இந்த இக்கட்டான சூழலிலும் தனது படத்துக்கான ப்ரோமோஷனை தமிழ் மற்றும் தெலுங்கில் செய்து வருவதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமே வியப்பில் ஆழ்ந்துள்ளது.

ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே சமீபத்தில் யசோதா படத்தின் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்திருந்தார் சமந்தா.

அவ்வளவு சீக்கிரமா செத்துட மாட்டேன் என்கிற அளவுக்கு சமந்தா உருகி பேசியது டிரெண்டாகி வரும் நிலையில், அதை வைத்து அஜித் ரசிகர்களை வம்பிழுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கண்ணீர் விட்ட சமந்தா

கண்ணீர் விட்ட சமந்தா

கணவன் நாக சைதன்யாவை சமீபத்தில் பிரிந்ததில் இருந்தே மன நிம்மதிக்காக ஆன்மிக சுற்றுலா, வெளிநாடுகளுக்கு சுற்றுலா என சுற்றி வந்தார் நடிகை சமந்தா. புஷ்பா பாடலுக்கு சமந்தா போட்ட குத்தாட்டம் எல்லாம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய நிலையில், சமீபத்தில் திடீரென பேரதிர்ச்சியாக மயோசிடிஸ் எனும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள பேட்டியில் ஒரு கட்டத்தில் ரொம்ப கஷ்டத்துடன் கண் கலங்கி விட்டார்.

சீக்கிரம் சாக மாட்டேன்

சீக்கிரம் சாக மாட்டேன்

நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்டுள்ள மயோசிடிஸ் நோய் காரணமாக நரம்புகள் ரொம்பவே தளர்ந்து விடும் எழுந்து நடக்கவே முடியாத நிலை எல்லாம் ஏற்படும் என தகவல்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் ரொம்பவே ஷாக் ஆகினர். இந்நிலையில், அவ்ளோ சீக்கிரமெல்லாம் நான் சாக மாட்டேன், விரைவில் குணமாகி வருவேன் என தளராத மனத்துடன் சமந்தா பேசிய பேட்டி தீயாக பரவி வருகிறது.

இந்த நிலையிலும் ப்ரோமோஷன்

இந்த நிலையிலும் ப்ரோமோஷன்

ட்ரிப்ஸ் போட்டுக் கொண்டே டப்பிங் பேசியது மற்றும் இப்படி உடல் நிலை முடியாத சூழலிலும் பார்க்கவே பரிதாப இருக்கும் ஒரு நிலையிலும் இந்த வாரம் வெளியாக உள்ள தனது யசோதா படத்திற்கான ப்ரோமோஷனுக்காக சமந்தா எடுத்துள்ள முயற்சியை பார்த்த ரசிகர்கள் #Samantha ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அஜித்துக்கு புரியலையே

அஜித்துக்கு புரியலையே

சமந்தாவின் மன தைரியத்தை ரசிகர்கள் ஒரு பக்கம் பாராட்டி வரும் நிலையில், இன்னொரு பக்கம் தனது படத்தை ப்ரோமோஷன் செய்ய சமந்தா எடுத்துள்ள முயற்சி ஏன் அஜித்துக்கு கொஞ்சம் கூட புரியவில்லை என விஜய் ரசிகர்கள் வம்பிழுக்க விஜய் - அஜித் ரசிகர்கள் இடையே ட்விட்டர் மோதல் வெடித்துள்ளது.

அஜித் ஸ்டேட்மென்ட்

அஜித் ஸ்டேட்மென்ட்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள துணிவு படத்திற்கான ப்ரோமோஷனுக்கும் தான் வரமாட்டேன் என்பதை நடிகர் அஜித் சமீபத்தில், ஒரு நல்ல படம் என்பது அதன் ப்ரோமோஷனை அதுவே தேடிக் கொள்ளும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், சமந்தாவின் யசோதா படம் மோசமான படமா? அதனால் தான் முடியாத நிலையிலும் வந்து இப்படி பேசுகிறாரா என சமூக வலைதள சண்டையை பெரிதாக்கி வருகின்றனர். படத்திற்கான ப்ரோமோஷனும் அந்த படத்தின் ஹீரோவின் கடமை தான் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X