விஜய் ரூட்டில் அஜித்…! துணிவு ப்ரோமோஷனில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?
சென்னை: அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
அஜித்தின் துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசும் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்க வரவிருக்கிறது.
இந்நிலையில், துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொங்கல் ரேஸில் துணிவு
அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக 'துணிவு' படத்தில் இணைந்துள்ளனர். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தில் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்துடன் மஞ்சு வாரியர், பிக் பாஸ் பிரபலங்கள் அமீர், பவானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பொங்கல் ரேஸில் அஜித்தின் துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசும் களமிறக்கவுள்ளது. இதனால், பொங்கல் ரிலீஸ் செம்ம தாறுமாறாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

துணிவு ப்ரோமோஷன்ஸ்
அஜித்தின் துணிவு தியேட்டர் ரைட்ஸை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளது. இதனால், துணிவு ப்ரோமோஷன்கள் பயங்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் வாரிசும் பொங்கல் ரேஸில் இருப்பதால், துணிவு ப்ரோமோஷனில் படக்குழு அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. அஜித் பெரும்பாலும் அவரது படங்களுக்கான ஆடியோ ரிலீஸ், ட்ரெய்லர் வெளியீடு போன்ற எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. குறிப்பாக படத்தில் நடிப்பதோடு சரி, அதுகுறித்து எந்த தகவலையும் அவர் பகிர்ந்துகொள்வதில்லை.

விஜய் ரூட்டில் அஜித்
ஆனால், விஜய் குறைந்தபட்சம் ஆடியோ ரிலீஸ், ட்ரெய்லர் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளில் தலையைக் காட்டி குட்டி ஸ்டோரி சொல்லிவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி விடுவார். இந்நிலையில், வாரிசு படத்தின் ப்ரோமோஷனிலும் விஜய் கலந்து கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக வாரிசு ட்ரெய்லர் ரிலீஸ் துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டத்தில் திரையிடவும், அதில் விஜய் கலந்துகொள்வார் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இப்போது பொங்கல் போட்டியை சமாளிக்க துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அஜித் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக படக்குழுவினர் அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
கோலிவுட் முன்னணி நட்சத்திரங்களை மற்ற திரையுலக முன்னணி நடிகர்கள் அவர்களது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர். சமீபத்தில் புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், ராதேஷ்யாம், லால் சிங் சத்தா போன்ற படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஹீரோக்கள் கலந்துகொண்டனர். தமிழில், விக்ரம், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தீவிரமாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதனை சுட்டிக்காட்டிய ரசிகர்கள் விஜய், அஜித், நயன்தாரா ஆகியோர் மீது விமர்சனங்கள் வைத்தனர். இந்நிலையில் துணிவு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அஜித் பங்கேற்கவுள்ளதாக வெளியான செய்தி அவரது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











