துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி...6 பதக்கங்களை வென்று அசத்திய அஜித்

சென்னை : அஜித், தன்னை ஒரு சூப்பர் நடிகராக மட்டுமின்றி விளையாட்டு வீரராகவும் நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். பல போட்டிகளில் கலந்து கொண்ட அவர், பல பதக்கங்களை வென்றுள்ளார்.

தற்போது தன்னை மீண்டும் ஒரு சிறந்த விளையாட்டு வீரர் என அஜித் நிரூபித்துள்ளார். 46 வது தமிழக அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை ரைபிள் கிளப் சார்பில் பங்கேற்ற அஜித் 6 பதக்கங்களை வென்றுள்ளார்.

Ajith wins six medals as part of Chennai Rifle Club in shooting championship

இது பற்றி அஜித்திற்கு நெருங்கிய வட்டார தகவல்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியை சென்னை ரைபிள் கிளப்பில் மேற்கொண்டதாக சமூக வலைதளங்களில் போட்டோக்கள் பரவியது. ஆனால் மார்ச் 2 முதல் 7 வரை தமிழக அளவில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தான் அவர் பங்கேற்றார்.

அஜித் தலைமையில் தான் சென்னை ரைபிள் கிளப் அணி இந்த போட்டிகளில் பங்கேற்றது. அஜித்தும் அவரது அணியும் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்றனர். மேலும், 2 பிரிவுகளில் தங்கமும், இரண்டில் வெள்ளி பதக்கமும் வென்றனர் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் முழவதிலும் இருந்து மொத்தம் 900 துப்பாக்கிச் சுடும் வீரர்கள் இதில் பங்கேற்றனர். டிஜிபி தமிழ் செல்வன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X