ஹய்யா, என்னை 'தல' வாழ்த்தினாரே: பர்த்டே பேபி நஸ்ரியா ஹேப்பி அண்ணாச்சி
Recommended Video

திருவனந்தபுரம்: நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நஸ்ரியாவுக்கு அஜீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிக்க வந்த வேகத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார் நஸ்ரியா நஸீம். இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
ப்ரித்விராஜ், பார்வதி உள்ளிட்டோருடன் சேர்ந்து மலையாள படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் நஸ்ரியா.
நஸ்ரியா
நஸ்ரியா நேற்று தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார். கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியபோது எடுத்த வீடியோவை நஸ்ரியா ட்விட்டரில் வெளயிட்டுள்ளார்.

வாழ்த்து
நான் தல ரசிகை என்று நஸ்ரியா தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் அஜீத் நஸ்ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை நஸ்ரியாவே ட்விட்டரில் தெரிவித்தார். பிறகு என்ன நினைத்தாரோ அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.
தங்கச்சி
நடிகர் ப்ரித்விராஜ் தன் உடன்பிறவா தங்கை நஸ்ரியாவுக்கு ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோலிவுட்
மலையாள திரையுலகிற்கு மீண்டும் வந்துள்ள நஸ்ரியாவை அப்படியே கோலிவுட் பக்கமும் வரச் சொல்லி தமிழ் சினிமா ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











