Ajith: ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய அஜித்... இந்த மனசு யாருக்கு வரும்.. ட்ரெண்டாகும் போட்டோ!
சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் 5 நாள் பிரேக் விடப்பட்டதால் சென்னை திரும்பினார் அஜித்.
அப்போது அவர் தனது ரசிகை ஒருவரின் ஆசையை நிறைவேற்றிய போட்டோ வைரலாகி வருகிறது.
ட்ரெண்டாகும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இந்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸான துணிவு, ரசிகர்களின் வரவேற்புடன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து தனது 62வது படத்தில் நடித்து வருகிறார் அஜித். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.
ஏகே 62 எனத் தொடங்கப்பட்ட இந்தப் படத்திற்கு விடாமுயற்சி என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆனது. மேலும், அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், ரெஜினா ஆகியோர் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங் கடந்த மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது.
தற்போது அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்துவிட்ட படக்குழு, அடுத்து துபாயில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாம். அதற்காக 5 நாட்கள் பிரேக் விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பினார் அஜித். அவர் சென்னை திரும்பிய வீடியோ நேற்று டிவிட்டரில் வைரலானது. சென்னை விமான நிலையத்தில் இருந்து செம்ம ஸ்டைலிஷாக வெளியேறினார் அஜித்.
அதனைத்தொடர்ந்து தற்போது அஜித்தின் போட்டோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வயதான பெண்மணி வீல் சேரில் இருந்தபடி அஜித்தை அரவணைக்க முயற்சிக்கிறார். அஜித்தும் அவரது தோள்மீது கை போட்டு போட்டோ எடுத்துள்ளார். வயதானவராக இருந்தாலும் தனது ரசிகையின் ஆசையை நிறைவேற்ற அவருடன் போட்டோ எடுத்துக்கொண்ட அஜித்தை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
சமீப நாட்களில் அஜித்துடன் ஏராளமான ரசிகர்கள் போட்டோ எடுத்து வருகின்றனர். சினிமா உட்பட பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், பயணங்களின் போது தன்னை சந்திக்கும் ரசிகர்களுடன் அஜித் போட்டோ எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











