வெற்றி நாயகன் அஜித்...துப்பாக்கி சுடுதலில் 6 பதக்கங்களை தட்டி தூக்கிய அஜித்...கொண்டாடும் ரசிகர்கள்

திருச்சி : தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அஜித், பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றிலும் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே.இதைத் தவிர சமைப்பது, போட்டோகிராஃபி போன்றவற்றிலும் அஜித்திற்கு அதிக ஆர்வம் உண்டு.

இதைத் தொடர்ந்து பல துறைகளிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார் அஜித். ஏரோநெடிக்கல் டெக்னாலஜியில் தனது திறமையை வளர்த்துக் கொண்ட அஜித், கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் பயிற்சி பெற்று வருகிறார்.

சென்னை ரைஃபில் கிளப்பில் உறுப்பினராக இருக்கும் அஜித், சென்னை மற்றும் டில்லியில் நடந்த பல போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார். இந்த போட்டோ வைரலானது.

47வது துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்

47வது துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்

இந்நிலையில் இன்று திருச்சியில் 47 வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஆயுதப்படை ரைபிள் கிளப்பில் நடக்கிறது. கடந்த 27 ம் தேதி நடிகர் அஜித் மாஸ்டர் பிரிவில் பங்கேற்றார். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் சுடுதளம் மற்றும் பிஸ்டல் பிரிவில் பங்கேற்று அசத்தினார்.

6 பதக்கங்கள் வென்ற அஜித்

6 பதக்கங்கள் வென்ற அஜித்

இந்த போட்டியில் 3 பேரை கொண்ட அஜித் அணி சென்டர் ஃபயர் பிஸ்டல் மாஸ்டர் பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் பிரிவில் தங்கப்பதக்கம், 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் மாஸ்டர் பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது.50 மீட்டர் பிஸ்டல் பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவு ஆகியவற்றில் வெண்கலப்பதக்கத்தையும் அஜித் அணி வென்றது.

டிரெண்டிங்கில் தெறிக்க விடும் ரசிகர்கள்

டிரெண்டிங்கில் தெறிக்க விடும் ரசிகர்கள்

இந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஜித் டீம் 4 தங்க பதக்கங்கள், 2 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.பரிசளிப்பு விழா நாளை நடக்கிறது. அஜித் டீம் வெற்றி பெற்றது ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.#Ajithkumar, #வெற்றிநாயகன்அஜித், #AK61 ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகின்றன. துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஜித் 6 பதக்கங்கள் வென்றதை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

டூர் முடிந்ததும் துப்பாக்கி போட்டி

டூர் முடிந்ததும் துப்பாக்கி போட்டி

தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வரும் அஜித், முதல்கட்ட ஷுட்டிங்கை ஐதராபாத்தில் முடித்ததும் நேராக ஐரோப்பா டூர் சென்றார். இனி அஜித் ஏகே 61 படத்தில் தான் அஜித் முழு கவனம் செலுத்த போகிறார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், சென்னையில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். அஜீித் தீவிர துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் டிரெண்டானது.

கவனத்தை ஈர்க்கும் அஜித்

கவனத்தை ஈர்க்கும் அஜித்

இதைத் தொடர்ந்து திருச்சி வந்த அஜித், கட்டிடம் ஒன்றின் மீது நின்று, வெளியே கூடி நின்ற ரசிகர்களை பார்த்து கையசைத்தது, அவர் செல்லும் வழியில் நின்ற ஒரு பெண்ணின் தலையில் கை வைத்து வாழ்த்தியது, பாதுகாப்பளித்த போலீசாரை சந்தித்து நன்றி சொன்னது என அஜித் செய்த ஒவ்வொன்றும் டிரெண்டானது. இப்போ எதற்காக இவர் திருச்சி வந்தார் என ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருக்கையில், இன்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்த தகவல் வெளியானதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X