தல... தல தான்... துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அஜித்... உற்சாகத்தில் ரசிகர்கள்

சென்னை : சினிமா, கார் ரேஸ், ஃபோட்டோகிராபி, சமையல், ஏரோ மாடலிங் என பல துறைகளிலும் கலக்கி வருபவர் நடிகர் அஜித். சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் தீவிரமாக களமிறங்கி அசத்தி வருகிறார்.

பிஸியான சினிமா படப்பிடிப்பு வேலைகளுக்கு இடையிலும், கிடைக்கும் ஓய்வுகளில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியை தொடர்ந்து வந்தார் அஜித். கடந்த சில நாட்களாக அடுத்த லெவலுக்கு முன்னேறி அதிக திறன் கொண்ட துப்பாக்கிகளையும் சுட பயிற்சி எடுத்து வருகிறார்.

Ajith won gold medal in state level shooting championship competition

இந்நிலையில் மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் கலந்து கொண்டு, தங்கம் பதக்கம் வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். தமிழக அளவிலான 46 வது துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிங் போட்டியில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அஜித் தங்கம் வென்றுள்ளார்.

Ajith won gold medal in state level shooting championship competition

இது தொடர்பான செய்தியும், போட்டோக்களும் வெளியானதும், அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் அஜித்திற்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள் உற்சாகமாக இதை கொண்டாடி வருகின்றனர்.

Ajith won gold medal in state level shooting championship competition

அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் அப்டேட் கேட்டு காத்திருந்து, சோர்ந்து போய் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X