அஜித் மட்டும் என்ன ஒஸ்தியா?: இது அந்த மனுஷனுக்கு தெரியுமா?
Recommended Video

சென்னை: அந்த அஜித் வேண்டாம் வேண்டாம் என்று கூறியும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது.
அஜித் தனது குடும்பத்துடன் கோவாவிற்கு சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு சென்னைக்கு திரும்பினார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சென்னைக்கு திரும்பிய போது விமான நிலையத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அது தான் சிலரை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

வாயில்
வெள்ளிக்கிழமை அன்று இரவு சென்னை விமான நிலையத்தில் ஒரு எக்சிட் வாயிலை பாதுகாப்பு படையினர் பிளாக் செய்தனர். அந்த வழியாக வெளியே செல்ல வந்த பயணிகளை மற்றொரு வாயில் வழியாக செல்லுமாறு திருப்பி அனுப்பி வைத்தனர். பயணிகளும் வேறு வழியில்லாமல் வேறு வாயில் வழியாக வெளியே சென்றனர்.

அஜித்
அஜித் வருவதற்காக தான் அந்த குறிப்பிட்ட வாயிலை பிளாக் செய்துள்ளனர். அஜித் விமான நிலையங்களில் விஐபிகளுக்கு கொடுக்கும் முன்னுரிமை தனக்கு வேண்டாம் என்று கூறுபவர். அப்படி இருக்கும்போது அவருக்காக ஒரு வாயிலை யாரையும் பயன்படுத்த விடாமல் தடுத்துள்ளனர். ஒரு நடிகருக்காக இதெல்லாம் தேவையா என்று சிலர் புலம்பிவிட்டுச் சென்றுள்ளனர்.

கூட்டம்
அஜித் வரும் வழியே பிற பயணிகளையும் விட்டால் கூட்டம் கூடிவிடுமாம். அதற்காக தான் இப்படி ஒரு வாயிலை அவருக்காகவே பாதுகாத்துள்ளனர். ரசிகர்கள் இல்லாமல் நடிகர்கள் ஏது? அப்படி இருக்கும் போது நடிகர்களுக்கு ஏன் இப்படி ஒரு உபச்சாரம் என்ற கேள்வி எழுந்துள்ளது. விமான நிலைய அதிகாரிகள் அஜித்துக்கு முன்னுரிமை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தல
வாக்குச்சாவடியில் மக்களுடன் மக்களாக நின்று வாக்களிப்பவர் அஜித். ஏடிஎம் மையத்தில் கூட வரிசையில் நின்று பணம் எடுத்தார். இப்படி மக்களோடு மக்களாக வரிசையில் நிற்கத் தயங்காத அவர் நிச்சயம் விமான நிலையத்தில் தனக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டிருக்க மாட்டார். இது விமான நிலைய அதிகாரிகள் அவர் மீதுள்ள மரியாதையால் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











