ரசிகர்களுக்காக இதை செய்வேன்.. தீவிரமாக பயிற்சி எடுக்கும் அஜித்.. தல 60 படத்தில் சிக்ஸ் பேக்!
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் 60வது படத்திற்காக அவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் 60வது படத்திற்காக அவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படம் தமிழகத்தில் பெரிய ஹிட் அடித்தது.
தற்போது நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் மீண்டும் சேர்ந்து படம் எடுத்து வருகிறார்கள். மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித் போலீஸ் ரோலில் நடிக்கிறார்.

எத்தனை
இந்த நிலையில் இந்த படத்திற்காக நடிகர் அஜித் உடம்பை குறைத்து வருகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. போலீஸ் கெட்டப் என்பதால் அவர் உடலை குறைத்து வருகிறார். இதனால் அவர் ஜிம்மில் 3 மணி நேரம் வரை தினமும் உழைக்கிறார் என்று செய்திகள் வந்தது.

சிக்ஸ்பேக் எப்படி
இதையடுத்து இது தொடர்பால் கூடுதல் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி நடிகர் அஜித் சிக்ஸ்பேக் வைக்க தீவிரமாக முயன்று வருகிறார். இதற்காக வயிறு சார்ந்த உடற் பயிற்சிகளை தீவிரமாக செய்து வருகிறார் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே விவேகம் படத்திற்காக நடிகர் அஜித் இப்படி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிர உடற்பயிற்சி
நான் உடற்பயிற்சி செய்து உடலை மாற்றினால் என்னுடைய ரசிகர்களும் மாற்றுவார்கள். அவர்கள் என்னை பின்பற்றி இப்படி உடற்பயிற்சி செய்தால் நன்றாக இருக்கும். இதற்கு முறையாக டயட் இருக்க வேண்டும். இதன் மூலம் ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

ரசிகர்கள் முக்கியம்
ஆகவே ரசிகர்களுக்காக நான் உடற்பயிற்சி செய்ய போகிறேன். அவர்களின் நலனுக்காக செய்ய போகிறேன், என்று நடிகர் அஜித் படக்குழுவிடம் தெரிவித்துள்ளார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் நடிகர் அஜித்திற்கு உடலில் நிறைய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

எப்படி இருக்குமோ
முக்கியமாக முதுகில் ஆபரேஷன் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அதையும் கூட அவர் பொருட்படுத்தாமல் தீவிரமாக தற்போது உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்கிறார்கள். அஜித்தின் புதிய சிக்ஸ்பேக் லுக் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே தீவிரமாக எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











