»   »  அஜீத்திடம் கேப்டன் விசாரணை

அஜீத்திடம் கேப்டன் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் அஜீத்தை இயக்குனர் பாலா தரப்பு ஹோட்டலில் அடைத்து வைத்து மிரட்டி, வாடா போடா என்று பேசி,தாக்க முயன்று, வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, பணம் பறிக்க முயன்ற விவகாரம்குறித்து அஜீத்திடம் நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்த் இன்று தொலைபேசியில் விசாரித்தார்.

இந்த விஷயத்தில் விஜய்காந்த் ரொம்பவே அமைதி காத்து வந்தார். அஜீத் புகார் தராததே அதற்குக் காரணமாகக்கூறப்பட்டது. இப்போது கத்திரிக்காய் முத்திப் போய் கடைக்கு வந்துவிட்டதையடுத்து அஜீத்திடம் நடந்தவிவரத்தை போனில் கேட்டுள்ளார் விஜய்காந்த்.

அப்போது, உரிய முறையில் புகார் தருமாறும் நடவடிக்கை எடுப்பதாகவும் விஜய்காந்த் கூறியுள்ளார்.

ஆனால், விசாரித்ததற்காக ரொம்ப நன்றி. இந்தப் பிரச்சனையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று அஜீத்கூறிவிட்டதாகத் தெரிகிறது.


இந்த விவகாரம் குறித்து நடிகர் நாசரும் அஜீத்தை சந்தித்து புகார் கொடுக்குமாறு வலியுறுத்தியும் அஜீத்மறுத்துவிட்டார்.

இந் நிலையில் அஜீத்தை மிரட்டியதாகக் கூறப்படும் மதுரை பைனானியர் அன்பு, தேனப்பன், மற்றும் பாலாவுக்குஎதிராக தமிழகம் முழுவதும் அஜீத்தின் ரசிகர்கள் எச்சரிக்கை போஸ்டர்கள் அடித்து ஒட்டி வருகின்றனர்.

கோவையில் ஒரு வித்தியாசமான போஸ்டரில், தர்மம் தலயைக் காக்கும் என்ற தலைப்பில், தர்மத்தின்வாழ்வுதனை சூது கவ்வும்... அதை தர்மம் ஒரு நாள் வெல்லும் என்று அச்சடித்து ஒட்டியுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil