Vidaamuyarchi Trailer: அஜித்தே... ரெடியா இருங்க.. இந்த நியூ இயர் உங்களதுதான்.. டிரைலர் வருவது உறுதி!

சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் தைப்பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம் விடாமுயற்சி. ஏற்கனவே பொங்கல் ரேஸில் உள்ள படங்கள், ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டது. மேலும், படத்தின் புரோமோசன்களை எல்லாம் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், விடாமுயற்சி படம் இப்போதுவரை சென்சார் செய்யப்படாமல் உள்ளது. எனவே சென்சார் செய்த பின்னர்தான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவேண்டும். அந்த வகையில் விடாமுயற்சி படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதிதியை இதுவரை படக்குழு தெரிவிக்கவில்லை. இப்படியான நிலையில் படத்தின் டிரைலர், 2025ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தவுடன் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அஜித் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடித்து வரும் விடாமுயற்சி படம், சில வாரங்களுக்கு முன்னர் வரை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் எனக் கூறிவிட்டு, படத்தின் படப்பிடிப்பை இன்னும் நடத்திக் கொண்டு இருந்தால், படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வியும் எழுந்தது. மேலும் படத்தின் எடிட்டிங்கில் ஏதாவது சொதப்பல் ஏற்பட்டுவிடுமோ என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு இருந்தது. படத்தின் மொத்த எடிட்டிங்கும் முடிந்து படத்தின் டப்பிங்கும் முடிவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்தது. படத்தை சென்சாருக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ajithkumar vidaamuyarchi vidaamuyarchi trailer

விடாமுயற்சி: மேலும் படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே பொங்கல் ரேசில் உள்ள படங்கள், ஜனவரி 10-ஆம் தேதி படத்தினை ரிலீஸ் செய்யவுள்ளாதாக கூறியுள்ளன. இதனால் பொங்கலுக்கு முந்தைய நாட்கள் வசூல், பொங்கல் தின வசூல் என்பதைக் கண்க்கில் வைத்து இந்தத் தேதியை படக்குழுக்கள் முடிவு செய்துள்ளது. ஆனால் அஜித்தைப் பொறுத்தவரையில் வியாழக்கிழமை அவருக்கு மிகவும் ராசியான கிழமை என்பதால், படத்தை வியாழக்கிழமை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிடுமோ என்ற சந்தேகமும் உள்ளது.

படம் ரிலீஸ் தேதி: அதாவது ஜனவரி 10ஆம் தேதி என்பது, வெள்ளிக்கிழமை வருகின்றது. எனவே, விடாமுயற்சி படத்தினை ஜனவரி 9ஆம் தேதியே ரிலீஸ் செய்வார்களா 10ஆம் தேதி ரிலீஸ் செய்வார்களா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும். எப்படியானாலும் படத்தின் ரிலீஸ் தேதியை, படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும்போது படக்குழு தெரிவித்துவிடும். எனவே, படத்தின் டிரைலர் ரிலீஸ்க்காகத்தான் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் பட்டாளமும் காத்துக்கொண்டு உள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

டிரைலர் ரிலீஸ்: இப்படியான நிலையில் படத்தின் டிரைலரை புத்தாண்டு இரவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் வேகமாக பரவி வருகின்றது. ஏற்கனவே டிரைலர் ரிலீஸ் தேதி என்பது ஜனவரி 1தான் என பேச்சுகள் அடிப்பட்டு வந்த நிலையில், இன்றைக்கு அந்தப் பேச்சுகள் அனைத்தும் அதிகரித்துள்ளது. அதாவது படத்தின் டிரைலரை படக்குழு, நள்ளிரவு 12.07க்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தத் தகவல் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுமட்டும் இல்லாமல், இந்த நியூ இயர் அஜித் ரசிகர்களால் அலறப்போகின்றது எனவும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X