Ajith Advice to soori - மற்றவர்களை பற்றி கவலைப்படாதீர்கள் - சூரிக்கு அஜித் சொன்ன அட்வைஸ்

சென்னை: Ajith Advice to soori (சூரிக்கு அஜித் அட்வைஸ்) நடிகர் சூரி சமீபத்தில் அஜித்தை சந்தித்ததாகவும் அப்போது அவருக்கு அஜித் அட்வைஸ் செய்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏழாம் வகுப்பு வரை படித்த சூரி சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் சென்னைக்கு கிளம்பி வந்தார். எல்லோரையும் படுத்தும் சினிமா சூரியை கொஞ்சம் அதிகமாகவே படுத்தியது. இருந்தாலும் சினிமா மீது இருக்கும் காதலால் சினிமா சம்பந்தப்பட்ட எந்த வேலையாக இருந்தாலும் செய்ய ஆரம்பித்தார் சூரி. அவரைப் பொறுத்தவரை சினிமாவுக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒன்று செய்துகொண்டிருந்தால் சினிமா கைவிடாது என்பது திண்ணமான நம்பிக்கை.

AjithKumar Advices to Actor Soori

திரையில் சூரி: செட் அசிஸ்டெண்ட், ஆர்ட் அசிஸ்டெண்ட் என கிடைத்த வேலைகளை எல்லாம் இழுத்துப்போட்டு செய்தார் சூரி. சங்கமம் படத்தில் ஐந்து சிறுவர்கள் புலி வேஷம் கட்டி மணிவண்ணனோடு ஆடுவார்களே அந்த சிறுவர்களுக்கு புலி போல் வேஷம் போட்டு விட்டது சூரி. மேலும் அந்தப் பாடலில் சில நொடிகள் திரையிலும் தோன்றுவார் சூரி. இப்படி தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் தலை காட்டியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

புரோட்டா சூரி: சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுதான் விதி. அந்த சினிமா சூரியையும் கைவிடவில்லை. பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் புரோட்டா மூலம் சூரியின் பசியை ஆற்றினார். 50 புரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார்.

முன்னணி காமெடி நடிகர்: வெண்ணிலா கபடிக்குழுவிலிருந்து தனியே தெரிந்த சூரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தனது காமெடி திறமையை காட்ட சரசரவென்று முன்னணி நடிகர் என்ற இடத்துக்கு உயர்ந்தார். அதன் பலனாக ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். முக்கியமாக சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் பட்டாசாக இருந்தன.

AjithKumar Advices to Actor Soori

விடுதலை சூரி: காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர். ஆக்‌ஷன் காட்சிகளில் அசால்ட்டாக ரிஸ்க் எடுத்திருக்கும் சூரிக்கு விடுதலை அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது. இதனையடுத்து கொட்டுக்காளி என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

அஜித்தை சந்தித்த சூரி: இந்நிலையில் அஜித்தை சூரி சமீபத்தில் சந்தித்தார் என கூறப்படுகிறது. அப்போது அவருக்கு அஜித்குமார், "மற்றவர்கள் உங்களை பற்றி என்ன சொல்கிறார்கள் என கவலை கொள்ளாதீர்கள். உங்களை பற்றி வரும் விமர்சனங்களை தலையில் ஏற்றிக்கொள்ளாதீர்கள். முதலில் உங்களை நீங்கள் மதிக்க தொடங்குங்கள் பிறகு மற்றவர்கள் தானாக உங்களை மதிப்பார்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள் சூரி" என அட்வைஸ் செய்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X