ஒரே ஃப்ரேமில் விஜய் - அஜித்.. இதெல்லாம் தியேட்டரில் பார்த்தா லைஃப் டைம் செட்டில்மெண்ட்டா இருக்கும்
சென்னை: நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் என இருவரும் சமகாலத்தில் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தவர்கள். ஒருவருக்கு ஒருவர் போட்டியாளர்களாக வளர்ந்து வந்தார்கள். இவர்களின் படங்கள் வெளியானாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் ஒரு கட்டத்தில் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இருவரும் வெற்றி பெற்றுள்ளார்கள், ஒருவர் வென்று ஒருவர் தோற்ற வரலாறு எல்லாம் உள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் இருந்த தொழில் போட்டி என்பது, விலகி விட்டது என்றே கூறலாம். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்று ஏங்கிக் கொண்டு இருந்த ரசிகர்களும் உள்ளார்கள். அவர்களின் ஏக்கங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இணைய வாசி ஒருவர் உருவாக்கி உள்ள ஏ.ஐ. வீடியோ பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.
சில நேரங்களில் ரசிகர்களுக்கு மத்தியில் வாக்குவாதங்கள் சண்டைகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இப்படி இருக்கும்போது இருவரும் சினிமாவில் இருந்து விலகி நடிகர் விஜய் அரசியலிலும், அஜித் கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதே 2024ஆம் ஆண்டில் தனது பெயரில் அதாவது அஜித்குமார் ரேஸிங் என்ற கார் ரேஸ் கம்பெனியை உருவாக்கி நடிகர் அஜித் அதன் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். சர்வதேச நாடுகளில் அவரது ரேஸிங் அணி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளையும் கோப்பைகளையும் குவித்து வருகிறது.

அஜித் - விஜய் ஏ.ஐ வீடியோ: இந்நிலையில் இவர்கள் இருவரும் சினிமாவில் இருந்து ஒரே காலகட்டத்தில் வாழ்க்கையைத் தொடங்கி, அதன் பின்னர் ஒன்றாக வளர்ந்து, தற்போது இருவரும் சினிமாவில் இருந்து விலகி, தங்களது கனவுகளை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது இணைய வாசி ஒருவர், நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் என இருவரும் தனிதனியே ஒரு காரை ஓட்டிச் செல்வது போலவும், ஒரு கட்டத்தில் இருவரும் ஒரு இடத்தில் நின்று ஒருவருக்கு ஒருவர் ஒரு சல்யூட் அடித்து கொள்வது போலவும் , அதன் பின்னர் இருவரும் வேறு வேறு திசையில் தங்களது காரை ஓட்டிச் செல்வது போலவும் ஒரு ஏ.ஐ. வீடியோவை உருவாக்கி உள்ளார்.
ரேஸ் - அரசியல் களம்: அதன் பின்னர் அஜித்தின் கார் ரேஸ் சர்க்யூட்டிற்குள் வேகமாக சீறிப் பாய்வது போலவும், நடிகர் விஜயின் கார் மக்கள் திரளாக திரண்டுள்ள இடத்தை நோக்கிச் செல்வது போலவும் அடுத்த காட்சி ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அஜித் கார் பந்தயத்தில் முதல் பரிசை வெல்வது போலவும், விஜய் அந்த திரளான மக்கள் மத்தியில் உரையாற்றுவது போலவும் அடுத்த காட்சி ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.ஐ வீடியோ இணையத்தில் வேகமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் பலர் லைக்குகளையும் கமெண்ட்களையும் மாறி மாறி பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக சில ரசிகர்கள் இந்த காட்சிகளை எல்லாம் வெள்ளித்திரையில் பார்த்தால் எப்படி இருக்கும் என்றும் இருவரும் இணைந்து இப்போது அதிரடியான படத்தில் நடித்தால் கூட நன்றாக இருக்குமே என்று ஆசையை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒரே ஃப்ரேமில் விஜய் - அஜித்.. இதெல்லாம் தியேட்டரில் பார்த்த லைப் டைம் செட்டில்மெண்ட்டா இருக்கும்



Click it and Unblock the Notifications











