குடைச்சல் புடுச்சவரா AK.. அந்த விஷயத்தில் அஜித்தை விட விஜய்யும் ரஜினியும் தான் பெஸ்ட்.. பிரபலம் ஓபன்
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் பெயர்கள் இல்லாமல் இருக்காது. அவர்கள் படங்களுக்கு மேக்கிங்கிற்கு எவ்வளவு செலவாகிறது என்பதைக் காட்டிலும் அவர்களின் சம்பளம் எவ்வளவு என்பதுதான் பலருக்கும் இருக்கும் கேள்வியாக இருக்கும். இவர்களில் விஜய்தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். அதே நேரத்தில் ரஜினிகாந்த்தும் ரூபாய் 150 கோடிகள் வரை சம்பளமாகப் பெறுகிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் இடத்தில் இருந்து சம்பளத்தை பெறுவதில் மிகவும் கறார் காட்டுவது அஜித் தான் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.
அஜித் குமார் நடிப்பில் அடுத்து அவரது 64வது படம் உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குநராக இருப்பார் எனக் கூறப்படுகிறது. தற்போது அஜித் குமார் தனது கார் ரேஸ் அணி உடன் உலகம் முழுவதும் நடைபெறும் ஃபார்முலா 4 ரக பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார். இந்த கார் ரேஸ் பந்தயம் வரும் அக்டோபர் மாதம் முடிவடைந்துவிடும். அதன் பின்னர் அவர் சினிமாவில் நடிக்க உள்ளார். இதற்காக கதை கேட்டு இயக்குநர் தயாரிப்பாளர் வரை எல்லாம் முடிவாகிவிட்டது.
படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் விமர்சன ரீதியாக சிலரால் கடுமையான விமர்சிக்கப்பட்டாலும், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போன படமாக மாறிவிட்டது. வணிக ரீதியாகவும் படம் வெற்றிப் படமாக மாறியது.

சம்பள விஷயத்தில் அஜித்: நடிகர் அஜித்தைப் பொறுத்தவரை தனது சம்பள விஷயத்தில் மிகவும் கறாராக இருக்க கூடியவர். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்க காரணமாக இருந்ததே சம்பளத்தை உரிய தேதியில் அஜித்திற்கு வழங்காததுதான் எனவும் கூறப்பட்டது. தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்பளத்தை வசூலிப்பதில் அஜித்தை விட விஜய் மற்றும் ரஜினிகாந்த் எவ்வளவோ பரவாயில்லை என வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.
விஜய், ரஜினி பரவாயில்லை: அவர் கூறுகையில், " அஜித் தனது சம்பளத்தை வங்கிக் கணக்கில் போடச் சொல்லுகிறார். ஆனால் அது இந்தியாவில் இருக்கும் வங்கிக் கணக்கு இல்லையாம், துபாயில் உள்ள வங்கிக் கணக்கிற்கு போட சொல்லுகிறார். இது பல தயாரிப்பாளர்களுக்கு சௌகரியமாக இல்லையாம். ஆனால் இந்த விஷயத்தில் அஜித்தை விட அதிக சம்பளம் வாங்கும் விஜய் எவ்வளவோ பரவாயில்லை. தயாரிப்பாளர் எப்படி, எப்போது கொடுத்தாலும் சம்பளத்தை வாங்கிக் கொள்கிறாராம்.

குடைச்சல் கொடுக்கும் அஜித்: அதேபோல் தான் ரஜினியும். அதாவது ரஜினி மற்றும் விஜய் என இருவரும் படத்தின் டப்பிங்கிற்கு முன்னரே முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என அஜித் போல் குடைச்சல் கொடுப்பதில்லை. ஆனால் அஜித் படத்தின் டப்பிங்கிற்கு முன்னதாக தனது மொத்த சம்பளத்தையும் செட்டில் செய்து விட வேண்டும் என்ற கண்டிஷன் போடுகிறாராம்" எனத் தெரிவித்துள்ளார். வலைப்பேச்சு பிஸ்மியின் இந்த கருத்து திரைத்துறையில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டுமல்லாமல், அஜித் ஏன் இந்தியாவில் இருக்கும் வங்கிக் கணக்கிற்கு பணத்தை போடச் சொல்லாமல், துபாயில் இருக்கும் வங்கிக் கணக்கிற்கு பணத்தை போடச் சொல்லுகிறார் என்ற கேள்வியை கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











