AK: அஜித்துக்கு ஷாலினி கொடுத்த பர்த் டே கிஃப்ட் என்ன தெரியுமா? இத்தனை லட்சங்களா?
சென்னை: நடிகர் அஜித் இன்று அதாவது மே 1ஆம் தேதி தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி, அஜித்துக்கு மிகவும் விலை உயர்ந்த பைக் ஒன்றை பிறந்த நாள் பரிசாக கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அஜித்தும் ஷாலினியும் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் முதல் முறையாக இணைந்து பணியாற்றினர். அப்போது அஜித்துக்கு ஷாலினியை மிகவும் பிடித்துப் போக தனது காதலை ஷாலினியிடம் கூறியுள்ளார். முதலில் அதிர்ச்சி அடைந்த ஷாலினி, அதன் பின்னர் அவரது காதலை ஏற்றுக் கொண்டார். இருவரும் கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களின் திருமணத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான மு.கருணாநிதி, செல்வி ஜெ. ஜெயலலிதா என பல அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு 25 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். அஜித்துக்கு சினிமா மட்டும் இல்லாமல், பைக் ரேஸ், கார் ரேஸ், பைக்கில் நாடு நாடாக சுற்றுவது, துப்பாக்கி சுடுவது, புகைப்படங்கள் எடுப்பது என அவரது ஆர்வத்துக்கு எல்லாம் தீனி போட்டுக் கொண்டுதான் உள்ளார். தனது வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக, தனது ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு, ஆர்ப்பாட்டமே இல்லாத நடிகராக மாறினார்.
பிறந்த நாள்: இப்படியான நிலையில் அஜித் குமார் இன்று அதாவது மே 1ஆம் தேதி தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைத்துறையினர் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள், அஜித் குமாரின் ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இணையத்தில் இவரது பிறந்த நாள் தொடர்பான போஸ்ட்கள் குவிகிறது.

பைக்: இந்நிலையில் நடிகையும் அஜித் குமாரின் காதல் மனைவியுமான ஷாலினி அஜித் குமாரின் கடந்த ஆண்டு பிறந்த நாளுக்கு பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷாலினி, அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதாவது, 2024 ஆம் ஆண்டில் கொண்டாடிய பிறந்தநாள் பற்றிய நினைவுகள். வாழ்க்கையில் சிறந்த நாட்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் லைக்குகளை குவித்து வருகிறது. அஜித்துக்கு ஷாலினி கொடுத்துள்ள டுகாட்டி பைக்கின் விலை சுமார் ரூபாய் 20 லட்சங்களில் இருந்து சுமார் ரூபாய் 40 லட்சங்கள் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

பிடித்த தம்பதி: அஜித் குமார் சில தினங்களுக்கு முன்னர் பத்ம பூஷன் விருது பெற்ற பின்னர் அளித்த பேட்டியில் தனது காதல் மனைவி ஷாலினி குறித்து பேசியிருந்தார். அவர் தனது வாழ்க்கையை தியாகம் செய்து, எனது வாழ்வின் வெற்றி தோல்விகளில் உடன் நின்றுள்ளார். அவர் இல்லை என்றால் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என பேசியிருந்தார். தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் பலருக்கும் பிடித்த தம்பதியர்களில் அவர்கள் டாப் லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











