Ajithkumar: ரூ. 15 கோடிக்கு ரேஸ் கார் வாங்கிய அஜித்.. உலகத்திலேயே 500 பேரிடம் மட்டுமே இருக்கும் கார்!

சென்னை: நடிகர் அஜித் குமார் வெறித்தனமான கார் ரேஸர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இன்னும் சொல்லப்போனால், தனது ரோல் மாடலான கார் ரேஸர் அயர்டன் சென்னாவைப் போல் ஓடுதளத்தில் மரணிக்க கூட தயாராக இருக்கிறார் அஜித். பல முறை விபத்துகளைப் பார்த்தும் கொஞ்சம் கூட பின் வாங்காமல் இந்த குதிரை மட்டும் ஓடிக்கொண்டே உள்ளது என்றால் அதற்கு அவரது மன தைரியத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும். தன்னம்பிக்கைதான் அஜித். அஜித் தான் தன்னம்பிக்கை. இந்நிலையில் தனது ரோல் மாடலான அயர்டன் சென்னாவின் பெயரில், மெக்லாரன் சென்னா என தயாரிக்கப்பட்ட காரினை அஜித் வாங்கியுள்ளார். இந்த கார் இந்திய மதிப்பில் ரூபாய் 8 கோடிகள் முதல் ரூபாய் 10 கோடிகள் வரை இருக்கும், ஆனால் இந்த கார் ஸ்பெஷல் எடிஷனாக உருவாக்கப்பட்டதால் சுமார் ரூபாய் 12 கோடி முதல் 17 கோடி வரை விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே கூறியது போல் அஜித்தின் ரோல் மாடல் அயர்டன் சென்னா. பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் கடந்த 1994ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணத்தார். அயர்டன் சென்னாவிற்கு அமைக்கப்பட்டுள்ள சிலையை நேரில் சென்று பார்வையிட்ட அஜித் குமார் அவரது சிலையின் பாதத்தில் முத்தம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

Ajithkumar Bought Special Edition Car Price Rs 15 Cr McLaren Senna Car Made Tribute to AyrtonSenna
Photo Credit:

புதிய கார்: இந்நிலையில் அஜித் குமார் தனக்கு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதாவது இந்த கார் மறைந்த கார் ரேஸர் அயர்டன் சென்னாவின் நினைவைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த காரினை, இங்கிலாந்தினைச் சேர்ந்த McLaren Automotive என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அயர்டன் சென்னாவின் நினைவைப் போற்றும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளதால் இது ஒரு ஸ்பெஷல் எடிசன் கார். மொத்தமாகவே 500 கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் சாதாரண சாலைகளில் ஓட்டுவது சிக்கலான விஷயம். அதே நேரத்தில் இந்த காரினை கார் ரேஸ்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஓடுதளங்களில் இந்த கார் சீறிப்பாயும்.

கார் விலை: அயர்டன் சென்னாவின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள இந்த காரினை அஜித் குமார் தற்போது வாங்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு ரூபாய் 8 கோடியில் இருந்து ரூபாய் 10 கோடிகள் தான். ஆனால் இந்த கார் ஸ்பெஷல் எடிஷனாக உருவாக்கப்பட்டுள்ளதால் கார் சுமார் ரூபாய் 12 கோடியில் இருந்து ரூபாய் 17 கோடிகள் வரை விற்பனை செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அஜித் வாங்கியுள்ள இந்த ஸ்பெஷல் எடிஷன் காரின் விலை ரூபாய் 15 கோடிகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Ajithkumar Bought Special Edition Car Price Rs 15 Cr McLaren Senna Car Made Tribute to AyrtonSenna
Photo Credit:

சுரேஷ் சந்திரா: அஜித் இந்த கார் வாங்கியுள்ளது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா, " அஜித் குமார் மெக்லாரன் சென்னா காரினை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளதால் அயர்டன் சென்னா மீண்டும் உயிர்த்தெழுகிறார்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அஜித் குமார் ரூபாய் 15 கோடியில் கார் வாங்கியுள்ளாரா என்ற கேள்வியை பலரும் ஆச்சரியத்தோடு பகிர்ந்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X