Ajith - Suriya: சூர்யா குறித்து அஜித் சொன்ன கமெண்ட்.. ஓபனாக போட்டு உடைத்த திலீப் சுப்புராயன்!
சென்னை: நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் அடையாளமாக உள்ளார். ஆனால் இப்போது அவரது நடவடிக்கைகள் அவரை இந்திய விளையாட்டுத்துறையின் அடையாளமாக மாற்றி வருகின்றது. ஆமாம் இன்னும் இரண்டு மாதங்களில் ஐரோப்பாவில் நடைபெறவுள்ள கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள, ஒரு அணியையே உருவாக்கி வருகின்றார். அதற்காக தனது அணியுடன் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இதற்காக கடந்த சில மாதங்களாக அபுதாபியிலேயே உள்ளார். இப்படியான நிலையில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களிலும் நடித்து வருகின்றார். அவர் நடிகர் சூர்யா குறித்து சொன்ன கமெண்ட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.

அஜித் நடிப்பில் ஒரு படம் ரிலீஸ் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு படம் ரிலீஸ் ஆனது. அதன் பின்னர் இவரது நடிப்பில் விடாமுயற்சி படம் உருவாவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் படம் எப்போது ரிலீஸ் எனத் தெரியாமல் ரசிகர்கள் தவித்து வந்தனர். இந்நிலையில், அஜித் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி நடிக்கவும் செய்தார்.

ஒருகட்டத்தில் இரண்டு படங்களிலும் மாறி மாறி நடித்தார். இதில் குட் பேட் அக்லி படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மேலும் இந்தப் படத்தை 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படத்தின் அறிவிப்பு வந்த நாளிலேயே படக்குழு தெரிவித்தது. ஆனால், சில தினங்களுக்கு முன் வந்த விடாமுயற்சி படத்தின் டீசரில் , விடாமுயற்சி படம்தான் பொங்கலுக்கு வருகின்றது என உறுதிபடுத்தப்பட்டதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளினர். மேலும், குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு யோசித்து வருவதாக கூறப்படுகின்றது.

தைரியமான அஜித்: தமிழ் திரையுலகில் அஜித் மிகவுமே வித்தியாசமானவர். படங்களில் நடிப்பது, சம்பளம் வாங்குவது, அடுத்தவேலையைச் செய்வது என மிகவும் தெளிவான நபர். படம் பிடித்தால் வந்து பாருங்கள், எனக்காக உங்களது நேரத்தை வாழ்க்கையை வீணாக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு எடுத்துக் கூறியவர். தனது படங்களின் ப்ரோமோசனில் கூட கலந்து கொள்ள மாட்டார். அந்த அளவுக்கு தைரியமான நபர் என்றே இவரை அடையாளப்படுத்தலாம்.

சிவகார்த்திகேயன்: இப்படியான நிலையில், அஜித் குறித்தோ அஜித் கூறியது குறித்தோ யாராவது தெரிவித்துவிட்டால் அது அஜித் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த திரையுலகிலும் ஹாட் டாப்பிக்காக மாறிவிடுகின்றது. அண்மையில் கூட சிவகார்த்திகேயன் குறித்து அஜித் தெரிவித்த கருத்து பலரது கவனத்தினை ஈர்த்தது.

கமெண்ட்: இப்படியான நிலையில், கங்குவா மற்றும் விடாமுயற்சி என இரண்டு படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர், திலீப் சுப்புராயன் மாஸ்டர்தான். இவர் விடாமுயற்சி படத்துக்கான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தபோது, சூர்யா குறித்து திலீப் சுப்பராயனிடம் அஜித் கேட்டுள்ளார். அதாவது கங்குவா படம் எப்படி வந்து கொண்டு உள்ளது, சூர்யா எப்படி இருக்கின்றார்? எனக் கேட்டுள்ளார். அதற்கு, திலீப் சுப்புராயன், ' படத்திற்காக சூர்யா மிகவும் கடுமையாக உழைக்கின்றார். சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் வைத்து நடிக்கின்றார்' எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டதும் அஜித் உடனே, " அதுதான் சூர்யா" எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக திலீப் சுப்பராயன் வெளியே கூறியதால், சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.



Click it and Unblock the Notifications











