Ajith: அஜித் பொண்ணுக்கு 17 வயசாச்சா? தூக்கிக் கொஞ்சும் தாய்மாமன்.. யாரும் பார்க்காத போட்டோவா இருக்கே?
சென்னை: நடிகர் அஜித் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாக அமைப்போகின்றது என்றாலும் தொடக்கம் பெருத்த ஏமாற்றத்தோடு தொடங்கியுள்ளது. விடாமுயற்சி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என நினைத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு, படம் பொங்கலுக்கு வராது என்ற அறிவிப்பு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று இப்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. அதாவது, அஜித்தின் மகள் அனோஷ்கா தனது 17வது வயதில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதுதொடர்பாக அனோஷ்காவின் தாய்மாமனும் நடிகருமான ரிச்செர்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் அஜித் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் நடைபெற்று, 8 ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்களுக்கு முதல் குழந்தையான அனோஷ்கா பிறந்தார். அதாவது 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி, அனோஷ்கா பிறந்தார். ஷாலினி கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில், அஜித் பில்லா படத்தின் படப்பிடிப்புகளுக்காக, மலேசியாவுக்கு சென்று தங்கவேண்டி இருந்தது.

அந்த காலகட்டதில், மலேசியாவில் படப்பிடிப்பு நேரம் போக மீதி நேரங்களில் மனைவி ஷாலினிக்காக அஜித், பல்வேறு பரிசுப் பொருட்களை வாங்கிக் குவித்தார். அனோஷ்கா பிறந்த பின்னரும் சரி பிறப்பதற்கு முன்னரும் சரி, பொருப்பான அப்பாவாக இப்போதுவரை அஜித் உள்ளார். பொதுவாக பிரபலங்கள் தங்களது குழந்தைகளின் முகத்தை பொதுவெளியில் காட்டுவதற்கு அவ்வளவாக விரும்பமாட்டார்கள். ஆனால் அஜித்- ஷாலினி தம்பதியர் அந்த மாதிரி எல்லாம் இல்லாமல், தாங்கள் செல்லும் பொது நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டி வரும் சூழல் ஏற்பட்டால், குழந்தைகளின் முகத்தை மறைக்காமல் சர்வ சாதாரணமாக அழைத்து வந்தார்கள்.

அஜித் குடும்பம்: அதன் பின்னர் அஜித் - ஷாலினி தம்பதியர்களுக்கு ஆத்விக் என்ற மகன் பிறந்தார். அண்மையில் கூட பேட்மிடன் விராங்கனை பி.வி. சிந்துவின் திருமணத்தில் அஜித்குமார், ஷாலினிம் அனோஷ்கா, ஆத்விக் என மொத்த குடும்பமும் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். இவர்கள் அனோஷ்காவை சிறுவயதில் இருந்து பார்க்கும் ரசிகர்கள் கூறுவது, " அனோஷ்கா அப்படியே நம்ம அஜித் மாதிரி இருக்காங்க" என்பதுதான்.

அனோஷ்கா பிறந்த நாள்: ஷாலினியை விட உயரமாக வளர்ந்து விட்ட அனோஷ்கா, இன்று தனது 17வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளிநாட்டிற்குச் சென்றுள்ள அஜித் குடும்பம், அனோஷ்காவின் பிறந்த நாளையும் வெளிநாட்டில் கொண்டாடிவிட்டுத்தான் இந்தியா திரும்பவுள்ளதாக கூறப்படுகின்றது.

தாய்மாமன்: இப்படியான நிலையில் ஷாலினியின் சகோதரரும் அனோஷ்காவின் தாய்மாமனுமான, நடிகர் ரிச்செர்ட் தனது இன்ஸ்டாகிராமில் அனோஷ்காவுக்கு ஒரு வயது இருக்கும்போது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு 1+16 என கேப்ஷனும் இட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் பலர் அஜித் பொண்ணுக்கு 17 வயசாச்சா என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள் பலரும் அனோஷ்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











