Ajithkumar: அஜித் தன்னோட குழந்தைகளுக்கு கொடுத்த வாழ்க்கைப்பாடம்.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களின் ஒட்டுமொத்த வேலைகளையும் முடித்துக் கொடுத்துள்ள அஜித்குமார் தற்போது துபாயில் நடந்து வரும் ரேஸிங்கில் கலந்து கொண்டுள்ளார்.

அவரது டீம் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. தேசியக் கொடியுடன் இந்த வெற்றியை அஜித் சிறப்பாக கொண்டாடினார். அவரது கொண்டாட்டத்தில் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சில திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். அவரது குடும்பத்தினரும் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அஜித் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

ajithkumar vidaamuyarchi movie dubai racing

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித் தான் நடிப்பில் மாஸ் என்பதை அடுத்தடுத்த படங்கள் மூலம் நிரூபித்தவர். தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வரும் அஜித், நடிப்பில் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் இரு மாத இடைவெளிகளிலேயே ரிலீசாகவுள்ளன. இம்மாதம் 23ம் தேதி அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த படம் பொங்கல் ரேஸில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அதிலிருந்து பின்வாங்கியது.

அடுத்தடுத்த படங்கள்: இந்நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு மாத இடைவெளிகளிலேயே அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ளது அவரது ரசிகர்களை உற்சாக கொண்டாட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அஜித்தின் துணிவு படம் ரிலீசான நிலையில் இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் அடுத்த படம் ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் ஷூட்டிங், டப்பிங் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறைவு செய்துள்ள அஜித் தற்போது துபாயில் நடைபெற்று வரும் கார் ரேசிங்கில் பங்கேற்று வருகிறார்.

ரேஸிங்கில் வென்ற அஜித் டீம்: நேற்றைய தினம் அவரது டீம் இந்த ரேஸிங்கில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இதையடுத்து அஜித், அவரது நண்பர்கள், குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ரசிகர்களும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். துபாயில் ரேஸிங் நடக்கும் இடத்திலேயே சென்று அஜித்தையும் அவரது டீமையும் ரசிகர்கள் உற்சாகப்படுத்தியதை பார்க்க முடிந்தது. இதையடுத்து அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து வருகிறார் அஜித். ரசிகர்களுக்கு அவர்களது குடும்பத்தை கவனிக்குமாறு அவர் தொடர்ந்து கூறிவரும் நிலையில் தற்போதும் அந்த அட்வைசையே அவர் தொடர்ந்துள்ளார்.

குழந்தைகளுக்கு வாழ்க்கை பாடம்: இந்நிலையில் தன்னுடைய குழந்தைகளுக்கு தான் கொடுத்து வரும் அட்வைஸ் குறித்தும் அஜித் தற்போது பேட்டியொன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.பள்ளிகளில் அவர்கள் தங்களது கல்வியை மேற்கொள்வதுடன் அவர்களின் கம்யூனிகேட்டிவ் திறமைகளையும் சிறப்பாக பெற வேண்டும் என்று தான் கூறுவேன் என்று அஜித் தன்னடைய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் வாழ்க்கையில் முக்கியமான விஷயமாக டிராவலையும் விளையாட்டில் ஈடுபாடு காட்டுவதையும் தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் அஜித் இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்தாட்டத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X