காளிதாஸ் ஜெயராம் திருமண வரவேற்பில் அஜித் குடும்பம்.. அஜித்குமார் பொண்ணைப் பாருங்க!

சென்னை: தென்னிந்திய சினிமாக்களில் மிகவும் பிரபலமான மூத்த நடிகர்களில் ஒருவர் ஜெயராம். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தைப் பெற்றவர். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். காளிதாஸ் ஜெயராமிற்கு கடந்த 7ஆம் தேதி குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இவர், தனது நீண்ட நாள் காதலியான தாரணியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண விழாவில் மலையாள திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் அஜித்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.

Ajithkumar Ajithkumar Family Kalidas Jayram Wedding Reception

காளிதாஸ் ஜெயராமைப் பொறுத்தவரையில் வளர்ந்து வரும் நடிகர் என்றாலும், கவனம் பெறும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரது நடிப்பு படத்திற்குப் படம் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றது. இதுமட்டும் இல்லாமல், தனது நடிப்பின் தரத்தினை நாளுக்கு நாள் அவர் உயர்த்திக் கொண்டே இருக்கின்றார். பாவக்கதைகள் ஆந்தாலஜியில் இவர் திருநங்கையாக நடித்தது இவருக்கு பெரும் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது. இதுமட்டும் இல்லாமல், விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார். கடைசியாக வெளியான ராயன் படத்தில் தனுஷின் தம்பியாக நடித்திருந்தார்.

Ajithkumar Ajithkumar Family Kalidas Jayram Wedding Reception

காளிதாஸ் ஜெயராம்: காளிதாஸ் ஜெயராம் தனது கல்லூரி காலத்தில் இருந்தே, தன்னை பலகுரல் அதாவது மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்டாக வளர்த்துக் கொண்டவர். ஒரு விருது வழங்கும் விழாவில், தமிழ் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் பெரிய நடிகர்களின் குரலில் பேசி அசத்தினார். காளிதாஸ் ஜெயராம் மற்றும் மாடல் அழகி தாரணி காளிங்கராயர் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 7ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

Ajithkumar Ajithkumar Family Kalidas Jayram Wedding Reception

திருமண வரவேற்பு: இவர்களின் திருமணத்தில் பல மலையாள நடிகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். இப்படியான நிலையில் சென்னையில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Ajithkumar Ajithkumar Family Kalidas Jayram Wedding Reception

அஜித் குடும்பம்: தமிழ் திரையுலகினைச் சேர்ந்த பலர் இவர்களின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமாரின் மனைவி நடிகை ஷாலினி, அஜித்குமாரின் மகள் அனோஷ்கா, அஜித்குமாரின் மகன் ஆத்விக் ஆகியோர் கலந்து கொண்டு, புதுமண தம்பதியரை வாழ்த்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அஜித்குமாரின் மகளைப் பார்த்த பலரும், 'பொண்ணு நல்லா வளர்ந்துடுச்சேப்பா' என கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அஜித் கலந்து கொள்ளவில்லை. அஜித் அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் நடைபெறவுள்ள கார் ரேஸ்ஸில் கலந்து கொள்ள தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

Ajithkumar Ajithkumar Family Kalidas Jayram Wedding Reception

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X