Ajith: ஒரு பக்கம் பால் அபிஷேகம்.. மறுபக்கம் பீர் அபிஷேகம்.. திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் அலப்பறை!

சென்னை: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் இரண்டு ஆண்டுகள் கேப்பிற்கு பிறகு இன்றைய தினம் ரசிகர்களை கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. படம் சில கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தை அஜித் ரசிகர்கள் திரையரங்குகளில் அதிகாலை முதலே கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படத்தில் அஜித்திற்கு மனைவியாக நடித்துள்ளார் திரிஷா. இந்தப் படத்தில் அர்ஜுன் மற்றும் ரெஜினா இருவரும் வில்லன்களாக மாஸ் காட்டியுள்ளனர். நடிகர் ஆரவ்வும் தன்னுடைய பங்கிற்கு வில்லத்தனத்தை காட்டியுள்ளார். ரோட் டிராவலை மையமாக கொண்ட இந்தப் படத்தில் கார் சேஸிங் உள்ளிட்ட காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக அனிருத்தின் இசை மாஸான வரவேற்பை பெற்றுள்ளது.

ajithkumar vidaamuyarchi movie tamil cinema


நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த 2023ம் ஆண்டில் பொங்கல் கொண்டாட்டமாக வெளியானது. இந்தப் படத்தில் நெகட்டிவ் ஷேடையும் வெளிப்படுத்தியிருந்தார் அஜித்குமார். படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்களின் கூட்டணி படத்திற்கு சிறப்பாக அமைந்தது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கியிருந்த நிலையில், படம் மிகப்பெரிய வசூல் கொண்டாட்டத்தை தயாரிப்பு தரப்பிற்கு கொடுத்தது. முன்னதாக நேர் கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களிலும் இந்த கூட்டணி இணைந்திருந்த நிலையில், ஹாட்ரிக் வெற்றியை துணிவு படம் மூலம் கொடுத்திருந்தது.

விடாமுயற்சி படம்: இந்தப் படத்தை தொடர்ந்து சில மாதங்களிலேயே விடாமுயற்சி படம் அறிவிக்கப்பட்டு அசர்பைஜானில் சூட்டிங்கும் துவங்கப்பட்ட நிலையில், படம் 6 மாதங்கள் சூட்டிங் நடத்தப்படாமல் முடங்கியது. இதனால் படத்தின் ரிலீசும் பாதிக்கப்பட்டது. கடந்த பொங்கல் கொண்டாட்டமாக இந்தப் படம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இறுதியாக இன்றைய தினம் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. படம் ரோட் டிராவலை மையமாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித்திற்கு ஜோடியாகியுள்ளார் திரிஷா. முன்னதாக இந்த ஜோடி 7 படங்களில் நடித்துள்ள நிலையில், அந்த படங்களின் கெமிஸ்ட்ரி இந்தப் படத்திலும் தொடர்ந்துள்ளது.

ajithkumar vidaamuyarchi movie tamil cinema

அஜித்தின் போராட்டம்: தன்னுடைய மனைவிக்காக, அவரை மீட்பதற்காக அஜித் மேற்கொள்ளும் அதிரடி இந்தப் படத்தின் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது. அஜித் என்றாலே அதிரடி ஆக்ஷன் என்ற நிலையில், படத்தில் அதை அதிகமாக கொள்ளாமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார மகிழ் திருமேனி. முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான படங்களையும் இந்தப் படம் பீட் செய்யவில்லை என்ற விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகின்றன. அஜித்திற்கு அதிகமான அதிரடி ஃபைட் சீன்கள் இல்லாததும் ரசிகர்களின் குறையாக காணப்படுகிறது. படம் அஜித் படமாகவும் இல்லாமல் மகிழ் திருமேனியின் படமுமாகவும் இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மிரட்டிய அனிருத் இசை: இந்தப் படத்தின் ஹீரோவாக அனிருத் தன்னுடைய இசையால் அதிரடி கிளப்பியுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. எது எப்படியாக இருந்தாலும் அஜித்தை இரண்டு ஆண்டுகள் கழித்து திரையில் பார்த்ததே போதும் என்ற வகையில் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தை பகிர்ந்து வருகின்றனர். திரையரங்குகளில் அடுத்தடுத்து அஜித்தின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் என அவர்கள் விடியற்காலை முதலே அலப்பறையை கூட்டினர். திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த அஜித்தின் கட்அவுட்டிற்கு முன்னதாக அவர்கள் அதிகமாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X