விடிஞ்சா கல்யாணம் புடி வெத்தலைப்பாக்கு கதையா?.. குட் பேட் அக்லியை கண்டுக்காத மைத்ரி மூவி மேக்கர்ஸ்?
சென்னை: அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் வரும் 10ஆம் தேதி அதாவது அடுத்த வாரம் வியாழக்கிழமை வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சரியாக ஒரு வார காலம் மட்டுமே இடையில் உள்ளது. ஆனால், படக்குழு படத்தின் டிரைலர் குறித்து எந்தவிதமான அப்டேட்டும் கொடுக்காமல் உள்ளது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முதன் முதலாக காலடி எடுத்து வைக்கும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தனது முதல் படத்திலேயே சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க வேண்டும் என, அஜித் குமாரை கதாநாயகனாக வைத்து குட் பேட் அக்லி படத்தை உருவாக்கியுள்ளது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். முதலில் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், இசையமைப்பாளருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்னையால், படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாரை கமிட் செய்தார்கள்.
படக்குழு தரப்பில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னரே ரிலீஸ் செய்து விட்டார்கள். பாடல்களை கடந்த இரண்டு வாரங்களாக ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்து வருகிறார்கள். இதுவரை படக்குழு தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட ஒவ்வொரு அப்டேட்டிற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தின் டீசர் தமிழ் சினிமா வரலாற்றிலேயே 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற சாதனையைப் படைத்தது.

கொண்டாட்டம்: அதேபோல் வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, ரசிகர்கள் பல நாட்களா அஜித் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்களோ அதுபோல இந்த படம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஓ.ஜி. சம்பவம் பாடலும், ஜி.பி.யு மாமே பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் லட்சக்கணக்கான ரசிகர்களின் ரிங்டோனாகவும் இந்த பாடல்கள் மாறிவிட்டது. பாடல் வரிகள் அஜித்திற்காக பார்த்து பார்த்து எழுதப்பட்டது போல் உள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

டிரைலர்: ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்களும் டீசர் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. இப்படியான நிலையில் படம் ரிலீஸ் ஆக இன்னும் சரியாக ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் டிரைலர் குறித்த அப்டேட்டுகள் எதுவும் படக்குழு தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த வாரம் தொடங்கியதிலிருந்தே, ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். டிரைலரை பார்க்க எந்த தியேட்டருக்கு போலாம் என்ற கேள்வியோடு ரசிகர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்டேட்?: ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், விடிஞ்சா கல்யாணம் புடி வெத்தலை பாக்கு என்ற சொலவடை போல நடந்து கொள்கிறார்கள் என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. ரசிகர்கள் வெறியாகி தயாரிப்பு நிறுவனத்தை விமர்சிப்பதற்கு முன்னதாக, டிரைலர் குறித்த அப்டேட் விரைவில் வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











