Ajithkumar: மேடையில் விஜய்.. மாநாட்டுத் திடலை அதிரவிட்ட தல ரசிகர்கள்.. கோட்டைவிட்ட தளபதி வெறியர்கள்!

விக்கிரவாண்டி: இன்றைக்கு அனைத்து பத்திரிகைகளிலும் முதல் பக்க தலைப்புச் செய்தியாக மாறியிருப்பது, நேற்று அதாவது, அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற, விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்துதான். மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கைக்கு மத்தியில், விஜய் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் என்றுதான் கூறவேண்டும். இப்படியான நிலையில் மாநாட்டில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றது. அதில் அஜித் ரசிகர்கள் மாநாட்டுத் திடலே அதிரும் வண்ணம் நடந்து கொண்டனர். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி, முழுக்க முழுக்க அரசியல் களத்தில் பயணிக்கப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தனது கட்சியை அறிவித்த தினத்தில் கூறினார். தமிழ் சினிமா வரலாற்றிலும் சரி, தமிழ்நாடு அரசியல் கள வரலாற்றிலும் சரி, நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது புதியதல்ல. ஆனாலும் மக்கள் மத்தியில் அனைத்து நடிகர்களுக்கும் பெரும் நம்பிக்கை வந்தது கிடையாது.

ajithey kadavuley tvk vijay maanadu thalapathy vijay

மேலும் சினிமாவில் இருந்து ஒருவர் அரசியலுக்கு வருகின்றார் என்றால், அவருக்கு சினிமாவில் ஏற்கனவே எதிராக உள்ளவர்களின் ரசிகர்களின் வாக்கு அவசியமில்லை எனக் கூறிவிடமுடியாது. இவர்களைக் கவர்வதும் சவாலான காரியம்தான். அப்படி விஜய்க்கு தற்போது உள்ள சவாலான காரியம் என்பது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களின் வாக்குகளைக் கவர்வதும், நடிகர் அஜித்குமாரின் ரசிகர்களின் வாக்குகளைக் கவர்வதும்தான்.

அஜித் ரசிகர்கள்: இப்படியான சூழலில் நடிகர் அஜித் ரசிகர்கள், பொதுவாகவே அஜித்தின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, தியேட்டர்களில் ஒன்றுகூடும்போது, அஜித்தை கொண்டாடும் விதமாக, 'அஜித்தே கடவுளே' என்பதை கோரசாக சொல்லுவார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாவே அஜித் ரசிகர்கள் தாங்கள் ஒன்று கூடும் இடங்களில் எல்லாம், இவ்வாறு கோரசாக கத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அஜித்தே கடவுளே: அண்மையில் சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியைக் காணச் சென்றபோதும் இவ்வாறு அஜித்தே கடவுளே என கோசமிட்டனர். சென்னை மெட்ரோ ரயிலிலும் இவ்வாறு செய்தனர். இப்படியான நிலையில், நேற்று விஜய் நடத்திய, தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கலந்து கொண்ட அஜித் ரசிகர்கள் அங்கேயும் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர் என்றே கூறலாம்.

அதிர்ந்த மாநாடு மேடை: விஜய் மாநாட்டு மேடையில் தனது முதல் அரசியல் கன்னிப்பேச்சினை பேசிக்கொண்டு இருந்தார். அவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போது, சில விநாடிகள் இடைவெளி விட, அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட அஜித் ரசிகர்கள், ”அஜித்தே கடவுளே” என கோசமிட ஆரம்பித்துவிட்டனர். முதலில் குறைவான நபர்களே இவ்வாறு கோசமிட, சில நொடிகளில் மாநாட்டுத் திடலே அதிரும் அளவிற்கு அஜித் ரசிகர்கள் கோசமிட ஆரம்பித்தனர். இதனைப் பார்த்த விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொடங்கி தொண்டர்கள் வரை வாயடத்துப் போனார்கள் மற்றும் அஜித் ரசிகர்களை அவர்களால் தடுக்கவும் முடியவில்லை. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதனைப் பார்த்த பலர், தளபதியின் மாநாட்டுத் திடலை தல ரசிகர்கள் அதிரவைத்துவிட்டனர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X