Ajithkumar: பரிதாபங்கள் கோபி சுதாகர் முன் தஞ்சையை அலறவிட்ட அஜித் ரசிகர்கள்.. என்னதான் நடந்துச்சு?
தஞ்சாவூர்: நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது ஷெக்ட்யூல்ட் ஸ்பெயினில் நடைபெற்று வருகின்றது. அங்கிருந்து அவர் எடுத்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள மாலில் பிரபல யூடூயூபர்கள் கோபி மற்றும் சுதாகர் அஜித்தே எனக் கூற ரசிகர்கள் கடவுளே எனக் கத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
நடிகர் அஜித் தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிட்டு ரசிகர்கள் எனது படம் பிடித்திருந்தால் வந்து பாருங்கள். முதலில் உங்கள் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என ஒரே அறிக்கையில் தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்தார். ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு படங்கள் கொடுத்து வந்த அஜித் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் கொடுத்து வருகின்றார். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி இந்த ஆண்டுக்குள்ளும் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்படுகின்றது.

அஜித் என்னதான் தனது ரசிகர்களை நல்வழிப்படுத்தி வந்தாலும், அஜித் ரசிகர்கள் அவர்மீது இருக்கும் அதீத அன்பினால் பல்வேறு குறும்புத்தனங்களைச் செய்து வருகின்றனர் என்றே கூறலாம். நடிகர் அஜித் தொடக்கத்தில் காதல் மன்னன் என அழைக்கப்பட்டார். அதன் பின்னர் தல என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் என அழைக்கப்பட்டார். ஒருகட்டத்தில் தனக்கு அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம் எனத் தெரிவித்தார். உடனே அவரை ரசிகர்கள் தல என அழைக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் தல எனவும் அழைக்க வேண்டாம் எனக் கூறினார். இப்போது படங்களில் அஜித்குமார் என மட்டுமே பெயர் வருகின்றது.
அஜித்தே கடவுளே: ஆனால் அஜித் ரசிகர்கள் அவரை எதாவது பட்டப்பெயருடனே அழைத்து பழகிவிட்டதால் தற்போது அஜித்குமாரை கடவுள் ரேஞ்க்கு கொண்டு செல்லத் தொடங்கிவிட்டனர் என்றே கூறலாம். அதாவது அஜித் ரசிகர்கள் தற்போது அஜித்தை எங்கு கொண்டாடினாலும், அஜித்தே கடவுளே என கூட்டமாக கூச்சலிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், தஞ்சையில் உள்ள தனியார் மாலான, லங்வல் மாலில் ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட விடுமுறை தினத்தினை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தஞ்சாவூர்: அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரபல யூடூயூபர்களான கோபி மற்று சுதாகர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கடவுளே என்ற வார்த்தையைச் சொல்ல அங்கிருந்த ரசிகர்கள் அஜித்தே எனக் கத்தினார்கள். தொடர்ந்து அதேபோல் கூற, ரசிகர்கள் அஜித்தே எனக் கத்திக் கொண்டே இருந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அஜித் ரசிகர்கள் பொது இடங்களில் இவ்வாறு கூடும்போது அஜித்தே கடவுளே என கத்தி வருவதை வாடிக்கையாக் கொண்டுள்ளனர்.
பரிதாபங்கள்: அதேபோல் அண்மையில் பெரிய விவகாரமான திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக கோபி சுதாகர் தங்களின் யூடூயூப் சேனலில் வெளியிட்ட வீடியோவுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்ப வருத்தம் தெரிவித்து வீடியோவை டெலிட் செய்தனர். ஆனால், அந்த வீடியோவை ஏற்கனவே டவுன்லோட் செய்திருந்தவர்கள் அதனை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வந்தனர். இவர்கள் நடத்தும் யூடூயூப் சேனலுக்கு 5.75 மில்லியன் ஃபாளோவர்ஸ்கள் உள்ளனர். கடைசியாக ஆயூத பூஜை தொடர்பாக வெளியிட்ட வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.


Click it and Unblock the Notifications











