மங்காத்தா ரீ ரிலீஸ்.. விஜய் ரசிகர்களுக்கு வந்தா ரத்தம்.. அஜித் ரசிகர்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக மொத்த இணையத்தையும் ஆக்கிரமித்து வரும் செய்தி என்றால் அது அஜித்தின் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை மங்காத்தா படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்படி இருக்கும்போது மங்காத்தா ரீ ரிலீஸ் என்பது திமுகவின் அரசியல் நகர்வு என்று சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு அஜித் ரசிகர்கள் பலரும் எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். அஜித் ரசிகர்களின் எதிர்வினை என்பது சரிதான் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதாவது கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். படம் வெளியாகி பிரமாண்டமான வெற்றியைக் குவித்தது. அது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினார்கள். இந்த படம் தான் இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. ரஜினி, கமல், சூர்யா , விக்ரம் உள்ளிட்டோரின் படங்கள் வெளியாகி இருந்தாலும், அஜித்தின் குட் பேட் அக்லி படம் தான் அதிக வசூல் குவித்தது.

இப்படி இருக்கும்போது ஏப்ரல் 18ஆம் தேதி அதாவது குட் பேட் அக்லி படம் வெளியாகி ஒரு வாரத்தில் சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்தார்கள். இது குட் பேட் அக்லி படத்தின் வசூலை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றாலும், தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். இப்படி இருக்கும்போது ஜன நாயகன் படத்தின் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்த தான் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இதற்கு பின்னால் ஆளும் திமுக அரசு உள்ளது என்றும் விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், விஜய் ரசிகர்களுக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்துள்ள பதிலடி என்பது, பாயிண்ட் பிடித்து பேசுவது போல இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதாவது குட் பேட் அக்லி படம் ஓடிக் கொண்டிருக்கும் போது, சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்த உங்களுக்கு நன்றாக இருந்ததா? அது போல தான் இதுவும். உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். விஜய் ரசிகர்களுக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்து வரும் இந்த பதிலடி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் மங்காத்தா படம் வரும் ஜனவரி மாதம் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











