இரண்டாவது மனைவியை பிரிந்த அஜித் பட நடிகர்..இதுதான் காரணமா?

சென்னை : நடிகர் பாலாவின் இரண்டாவது திருமண வாழ்க்கையும் முறிந்து விட்டதால், அவர் வேதனையின் உச்சக்கட்டத்தில் இருக்கிறார்.

நடிகர் பாலா 2003 ஆண்டு வெளியான அன்பு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படம் சுமாராக ஓடியது.

இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் பாலா

நடிகர் பாலா

இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா 2016ஆம் ஆண்டு பாடகி அம்ருதா சுரேஷை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒன்பது வயதில் மகன் இருக்கும் நிலையில், அம்ருதாவுக்கும் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2019ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

கடந்த ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது. ஆனால், இது குறித்து எந்த விதமான கருத்தையும் சொல்லாமல் மௌனமாக இருந்த பாலா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேரளா மருத்துவர் எலிசெபத் உதயன் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக போட்டோவை ஷேர் செய்து கூறியிருந்தார்.மேலும், கேரள மாநிலம் திருச்சூரில் பாலா - எலிசெபத் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இருவரும் பிரிந்தனர்

இருவரும் பிரிந்தனர்

இந்நிலையில், அழகாகக் போய் கொண்டிருந்த இவர்களில் திருமண வாழ்க்கையில் திடீரென விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக மலையாள ஊடகங்களில் தினமும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து நடிகர் பாலாவும் எலிசபெத்தும் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அஜீத் வீரம் படத்தில்

அஜீத் வீரம் படத்தில்

நடிகர் பாலா சிவா இயக்கிய வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். ரஜினிகாந்த் நடித்த வரும் அண்ணாத்த படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு ஹிட் லிஸ்ட் என்ற மலையாளப் படத்தையும் பாலா இயக்கியிருந்தார். புதிய முகம், சாகர் அலையஸ் ஜாக்கி ரீலோடட், என்னு நிண்டே மொய்தீன் உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X