Ajithkumar - சக ரைடருக்கு 15 லட்சம் ரூபாய் பைக் பரிசு... அஜித்தின் நெகிழ்ச்சி செயல்

சென்னை: Ajithkumar (அஜித்குமார்) தன்னுடைய சக ரைடரான சுகத் என்பவருக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை பரிசாக கொடுத்திருக்கிறார் அஜித்குமார்.

துணிவு படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித் அடுத்ததாக தனது 62ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். பல மாதங்கள் படத்தின் பெயர் சொல்லப்படாமல் இருந்த சூழலில் கடந்த 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு பெயர் அறிவிக்கப்பட்டது. படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

Ajithkumar Gifted BMW Bike to Co Bike Rider

அஜித் ஆரம்பித்த டூர்: ஏகே 62வை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் வெளியேற மகிழ் திருமேனி உள்ளே வந்தார். எனவே இந்தப் படத்தை தரமானதாக கொடுக்க வேண்டும் என நினைத்து கதையை இறுதி செய்தவற்கு நேரம் எடுத்துக்கொண்டார். எனவே படம் தொடங்க தாமதமானதால் ஏற்கனவே திட்டமிட்டிருந்த தனது வேர்ல்ட் டூரை அஜித்குமார் தொடங்கினார். இது அவரது முதல்கட்ட சுற்றுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே படத்துக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நேபாளம், பூடான்: இதனையடுத்து நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் பைக் ரைட் செய்தார் அஜித்குமார். அங்கும் அவரை பலர் அடையாளம் கண்டுகொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும், அவரை ரசிகர் ஒருவர் பின் தொடர்வது போன்றும், அஜித் செஃப் உடையில் சமைப்பது, பல இடங்களில் அவர் மின்னல் வேகத்தில் ரைட் செய்தது போன்ற வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகின.

ஆவணப் படமாகிறதா ரைட்?: மேலும் அஜித்தின் முதல் கட்ட சுற்றுப்பயணம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அது நிச்சயம் ஆவணப் படமாக வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின. அதுவும் அந்த ஆவணப் படமானது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் கசிந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறிவருகின்றனர்.

Ajithkumar Gifted BMW Bike to Co Bike Rider

அடுத்தக்கட்ட பயணம் எப்போது?: இந்தச் சூழலில் அஜித்தின் முதல் கட்ட சுற்றுப்பயணம் கடந்த 8ஆம் தேதியோடு முடிவடைந்தது. தொடர்ந்து, அவர் எங்கெல்லாம் பயணம் செய்தார் என்ற மேப்பை சுரேஷ் சந்திரா வெளியிட்டு, அடுத்தக்கட்ட பயணத்தை நவம்பர் மாதம் தொடங்குவார் என அறிவித்திருந்தார். விடாமுயற்சியின் ஷுட்டிங்கும் ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கவிருக்கிறது. இதில் அஜித் கலந்துகொண்டு தனது போர்ஷனை முடித்துக்கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் ஆரம்பித்த தொழில்: அஜித்துக்கு பைக் ரைட் மேல் உள்ள மோகத்தை அவர் ஆரம்பித்த ஏகே மோட்டோ ரைடு என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம் உணர்த்தியது. இந்நிலையில் தன்னுடைய சக ரைடர் சுகத் என்பவருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான BMW F 850 GS என்ற பைக்கை பரிசாக கொடுத்திருக்கிறார் அஜித். சுகத் தான் அஜித் சிக்கிமில் செய்த பைக் ரைடை ஏற்பாடு செய்து கொடுத்தார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X