Good Bad Ugly: கதைத்திருட்டு சர்ச்சையில் விடாமுயற்சி? நச் அப்டேட் கொடுத்த குட் பேட் அக்லி இயக்குநர்!
சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம் என விடாமுயற்சி படக்குழு கடந்த வாரத்தில் தெரிவித்தது. ஆனால் படத்தின் அறிவிப்பு வந்தபோதே, 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் என்ற அறிவிப்புடன் வந்த படம் குட் பேட் அக்லி. இந்த இரண்டு படங்களில் படப்பிடிப்பும் இன்னும் முடியாத நிலையில், இப்போதைக்கு விடாமுயற்சிதான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் படம் என கூறப்படுகின்றது.
இப்படியான நிலையில் விடாமுயற்சி படக்குழு கதைத் திருட்டு சர்ச்சையில் விடாமுயற்சி படக்குழு சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியானது. இப்படியான நிலையில் குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் குறித்து தெரிவித்துள்ள அப்டேட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் பொதுவாகவே ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு, அதன் பின்னர் மற்றொரு படத்தில் கமிட் ஆவார். இவரது நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் உருவாகி வருகின்றது. ஒரு படத்தினை மகிழ் திருமேனி இயக்க, லைகா நிறுவனம் தயாரித்து வருகின்றது. விடாமுயற்சி என பெயரிடப்பட்ட இந்தப் படத்திற்கு, அனிருத் இசை அமைக்கின்றார். இதுமட்டும் இல்லாமல், படத்தில், ஆரவ், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

படத்தின் டீசர் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படியான நிலையில், படக்குழு புது சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதாவது, விடாமுயற்சி படம், ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் தழுவல் என்றும், இதனை ப்ரேக் டவுன் படக்குழுவினரிடம் எந்த விதமான உரிமம் பெறாமல் படத்தினை எடுத்து விட்டதாகவும், லைகா தரப்பில் படத்தின் ரீமேக் உரிமத்தை வாங்குவதாக முதலில் தெரிவிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வருகின்றன. இப்படியான நிலையில், ப்ரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாராமவுண்ட் நிறுவனம், ரூபாய் 150 கோடு நஷ்ட ஈடு கேட்டு லைகாவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குட் பேட் அக்லி: இப்படியான சிக்கலில் விடாமுயற்சி படக்குழு இருப்பதால், ரசிகர்கள் தரப்பில் வருத்தத்தில் உள்ளனர். அதாவது, இந்தப் பிரச்னையால் படத்தின் ரிலீஸ் தேதியில் எதாவது மாற்றம் இருக்குமோ என அச்சப்படுகின்றனர். இப்படியான நிலையில், சூதுகவ்வும் 2 படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், கலந்து கொண்ட குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், குட் பேட் அக்லி படம் குறித்து அப்டேட் கொடுத்தார்.

ஆதிக் ரவிச்சந்திரன்: அதாவது, " நான் இயக்கிய மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியில் எனக்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ, அதே அளவுக்கு அர்ஜுனுக்கு (சூது கவ்வும் 2 படத்தின் இயக்குநர்) உள்ளது. அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் கதையிலும் இவரது பங்கு உள்ளது. சூது கவ்வும் 2 படம் வெற்றி அடைய வாழ்த்துகள் எனக் கூறினார்.

அப்டேட்: மேலும் இவரிடம் குட் பேட் அக்லி படம் குறித்து அப்டேட் கேட்டபோது, படப்பிடிப்பு நடந்து கொண்டு உள்ளது, இப்போதைக்கு என்னால் எந்த அப்டேட்டும் கொடுக்க முடியாது எனக் கூறினார். இவரது இந்த பேச்சு அஜித் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











