Good Bad Ugly: துப்பாக்கி.. பீரங்கி.. மொத்தமா வந்தாலும் OG சம்பவம்.. Fan Boy ஆதிக் விஜய்யை சொல்றாரா?

சென்னை: அஜித் குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் அஜித்தின் 63வது படம் ஆகும். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் முதல் பாடல் இன்று அதாவது மார்ச் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. OG சம்பவம் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த பாடல் வரிகளில் விஜய்யை அட்டாக் செய்துள்ளார்கள் என்ற பேச்சு திரைத்துறை வட்டத்தில் வேகமாக பரவி வருகிறது.

OG சம்பவம் பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பலர் இணைந்து பாடியுள்ளார்கள். பாடலின் புரோமோ நேற்று வெளியான நிலையில் பாடல் இன்று வெளியாகியுள்ளது. மொத்தம் மூன்று நிமிடங்கள் 15 நொடிகள் இருக்கும் இந்த பாடல் வரிகளில் நடிகர் விஜய்யை அட்டாக் செய்துள்ளார்கள் என்ற பேச்சு அடிபடுகிறது.

Ajithkumar Good Bad Ugly First Single OG Sambavam Song Attacks Vijay Fans Are Fight in Social Media

அதாவது பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளில் " துப்பாக்கி, பீரங்கி மொத்தமா வந்தாலும் ஒத்தை ஆளா சம்பவம்டா" என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வரிகள் விஜய்யை அட்டாக் செய்து எழுதப்பட்டுள்ளது என பேசப்பட்டு வருகிறது, காரணம், விஜய் நடிப்பில் துப்பாக்கி என்கிற படம் ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் அஜித்தின் சினிமா போட்டியாளர் என்றால் அது விஜய் தான். அதனால்தான் விஜய்யை அட்டாக் செய்து பாடல் வரிகளை எழுதி உள்ளார்கள் என கூறப்படுகிறது. மேலும் பாடல் வரிகள் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்க வேண்டும் என்பதால்தான் இப்படி எழுதப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். ப்ரோமோவில் ஜி.வி. மற்றும் ஆதிக் இணைந்து தொண்டை கிழிய சத்தமாக இந்த பாடலைப் பாடியுள்ளார்கள். மேலும் பாடலின் வரிகள் அஜித்திற்காக ஒவ்வொரு வார்த்தைகளாக சேர்க்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.

நடிகர் அஜித்குமார் தற்போது தனது கார் ரேஸில் அதிக கவனம் ஈர்த்து வருகிறார். இவரது அஜித் குமார் கார் ரேஸ் அணி கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை 24 மணி நேரம் நடைபெறவுள்ள கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இவரது அணி அணி இந்த போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணித்து வருகிறது. தற்போது இவரது அணி இத்தாலியில் உள்ளது, இந்நிலையில் இத்தாலியில் உள்ள உலகப் புகழ் பெற்ற, கார் நிறுவனமான Ferrari நிறுவனத்தின் அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார் அஜித்குமார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இவரது அணி இந்த போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணிப்பது,போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைகள் செய்வது உள்ளிட்ட விஷயங்கள் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் தொடர்ந்து அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது.

அஜித் குமார் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு கார் ரேஸில் கவனம் செலுத்த திட்டமிட்டதால், அவர் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் தனது அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்துவிட்டு, கார் ரேஸில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். கார் ரேஸ் மூலம் தமிழ் நாட்டிற்கும் இந்தியாவுக்கும் அஜித் குமார் மற்றும் அவரது அஜித் குமார் கார் ரேஸ் அணி பெருமை தேடிக் கொடுத்துக் கொண்டுள்ளது.

குட் பேட் அக்லி: அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தின் முதல் பாடலான ஓ.ஜி. சம்வம் பாடல் இன்று அதாவது மார்ச் 18ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. ஓ.ஜி. சம்பவம் என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ்குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் பாடியுள்ளார்கள்.இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் பாடலை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் பல ஆண்டுகளாக அஜித்துக்கு இதுபோன்ற பாடலுக்கு காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இந்த பாடல் விருந்தாக அமைந்துள்ளது.

Ferrari: இப்படியான நிலையில் அஜித் குமார் மற்றும் அவரது அஜித் குமார் ரேஸிங் அணியைச் சேர்ந்தவர்கள் இத்தாலியில் உள்ளார்கள். இப்போது அஜித் தனது ரேசிங் அணியினர் உடன் சேர்ந்து, இத்தாலியில் உள்ள Ferrari மியூசியத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். மேலும் அஜித் அங்கு உலா வரும் வீடியோக்களும் டிவிட்டர் பக்கத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

விஜய்: இன்று வெளியான ஓ.ஜி சம்பவம் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளில் " துப்பாக்கி, பீரங்கி மொத்தமா வந்தாலும் ஒத்தை ஆளா சம்பவம்டா" என்ற வரிகள் உள்ளன. இந்த வரிகள் விஜய்யை அட்டாக் செய்து எழுதப்பட்டுள்ளது என பரவலாக பேசப்பட்டு வருகிறது, காரணம், விஜய் நடிப்பில் துப்பாக்கி என்கிற படம் ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் அஜித்தின் சினிமா போட்டியாளர் என்றால் அது விஜய் தான். அதனால்தான் விஜய்யை அட்டாக் செய்து பாடல் வரிகளை எழுதி உள்ளார்கள் என கூறப்படுகிறது. எனவே பாடலை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதேநேரத்தில் விஜய் ரசிகர்கள் பாடலை இணையத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள். மேலும் லிரிக் வீடியோ வீடியோ கேம் போல் உள்ளது என பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் ஃபேன் பாய் சம்பவம் செய்கிறேன் என விஜய்யை தேவையில்லாமல் சீண்டியுள்ளார் என விமர்சித்து வருகிறார்கள்.

சிம்பு: குட் பேட் அக்லி படத்தை பொறுத்தவரை த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் ஷாலினி மற்றும் சிம்ரன் நடித்துள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் உலா வந்தது. இப்படி இருக்கும்போது தற்போது படத்தில் நடிகர் சிம்புவும் இருப்பதாக தகவல்கள் சினிமா வட்டாரத்தில் உலா வருகிறது. அதாவது, ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் ரசிகர் என்பதால், இந்த படத்தில் தீவிரமான அஜித் ரசிகரான சிம்புவையும் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வைத்துள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது. இது மட்டும் இல்லாமல், படத்தில் சிம்புவின் குரலாவது படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அது அஜித் ரசிகர்களுக்கு தியேட்டரில் விருந்தாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவலைக் கேள்விப் பட்ட ரசிகர்கள் செம குஷியாக உள்ளார்கள். இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X