குட் பேட் அக்லி ஓட்டை உடைசல்.. இத்தனை லாஜிக் மிஸ்டேக்குகள் தான் உங்களுக்கு தல கம்பேக்கா? முடியல!
சென்னை: கமர்ஷியலாக ஒரு படத்தை சூப்பர் ஹிட்டாக்குவது என்பது, ஒட்டுமொத்த திரைத்துறைக்குமே சவாலானதாக உள்ளது. இதில் படத்தில் இருந்து ரசிகர்களுக்கு டேக்-அவே என்ன இருக்கிறது என்ற கேள்வி எப்போதுமே இருக்கிறது. உதாரணத்திற்கு கடந்த ஆண்டு வெளியான தனுஷின் ராயன் படம் வசூல் ரீதியாக 100 கோடிகளை வசூலித்தது. ஆனால் படத்தில் இருந்து டேக் -அவே என்ன இருக்கிறது என்ற கேள்வி முதன்மையாக முன் வைக்கப்பட்டது.
இப்படி கமர்ஷியலாக ஒரு படத்தை வெற்றி பெற வைப்பது என்பது, நடிகரின் அபிமான ரசிகர்கள் தொடங்கி, ஜென்ரல் ஆடியன்ஸ், ஃபேமிலி ஆடியன்ஸ் ஆகியோரை ஒரு படம் ரீச் ஆகி வெற்றி பெறும்போது தான் அந்த படம் கமர்ஷியலாக ஹிட் படமாக மாறுகிறது. அப்படிப் பார்த்தால், சமீபத்தில் வெளியான லப்பர் பந்து, குடும்பஸ்தன் ஆகிய படங்களை கூறலாம். மேலும் இப்படங்கள், இயல்பில் இருந்து கொஞ்சமும் விலகவில்லை என்பது கூடுதல் பலமாக அமைந்தது.
இயல்புக்கு முரணாக பல கமர்ஷியல் படங்களை வெற்றிப் படங்களாக தமிழ் சினிமா மாற்றியுள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவை பெரிய அளவில் ஒர்க்-அவுட் ஆவதில்லை. வார இறுதி நாளில் வெளியாகும் இந்த படங்கள் அடுத்த வாரத்தின் தொடக்கத்திலேயே காத்து வாங்க ஆரம்பித்துவிடுகிறது. இது வணிக ரீதியாக பின்னடைவு தான் என்றாலும், மற்றொரு கோணத்தில் இதனை ஆரோக்கியமானதாக பார்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

சரி, இரு தினங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆன அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இருக்கும் லாஜிக் மிஸ்டேக்குகள் என்னென்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
* அஜித் நடு இரவில் சென்று ஜெயிலில் ஆஜராகிறார். ஆனால் அப்போது கைதிகளும் சிறை வளாகத்திற்குள் இருக்கிறார்கள். ஒரு சிறையில் மாலையில், கைதிகளை சிறைக்குள் அடைத்துவிடுவார்கள் என்பது தான் நடைமுறை.
* துப்பாக்கிகளைக் கொண்டு தாருமாறாக அஜித்தை நோக்கி சுடுகிறார்கள். ஆனால் ஒரு தோட்ட கூட அவர் மீது படவில்லை. மெயின் வில்லனாக காட்டப்படும் அர்ஜுன் தாஸ் மட்டுமே அஜித்துடன் மோதும் சண்டைக் காட்சி உள்ளது.

* அஜித்தை த்ரிஷா இந்தியாவுக்கு அனுப்பும்போது, அவர் அணிந்திருக்கும் உடை என்பது சட்டையாக உள்ளது. ஆனால் விமான நிலையத்தில் அவரை, யோகி பாபு பார்த்த பின்னர் அடுத்த ஷாட்டில் அஜித் கோட் சூட்டுடன் வருகிறார்.
* அதேபோல், அஜித்தின் மகனை பகலில்தான் ஜெயிலில் இருந்து மற்றொரு ஜெயிலுக்கு மாற்றுவார்கள். ஆனால் அஜித் தனது மகனைக் காப்பாற்ற செல்வார். ஆனால் அவை ஒரு ஷாட்டில் இருந்து மற்றொரு ஷாட்டிற்கு காட்சி மாறும்போது, பகலில் இருந்து இரவுக்கு மாறும் காட்சிகள் ஏற்றுக் கொள்ள முடியாத லாஜிக் மிஸ்டேக்ஸ்.

* அதே காட்சியில் ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு பிரசன்னா தாவுவார். அதேபோல் அஜித்தும் தனது காரில் இருந்து, காவல்துறை வாகனத்திற்கு தாவுகிறார். இந்த சீன் எல்லாம் இன்னுமாடா நீங்க மறக்கல என யோசிக்கிற அளவுக்கு இருக்கிறது.
* அஜித் குரூப் ஃபோட்டோ சூட் நடத்துகிறேன் என ராட்சத ஆயுதத்தின் மூலம் அனைவரையும் சுட்டுக் கொல்லும் காட்சியில், அவர் ஏற்கனவே பிடித்து வந்தவரை தவிர மற்ற அனைவர் மீதும், தோட்டாக்கள் படுகிறது. இந்த காட்சியை பார்க்கும்போது, 'அரே ஏமிரா இதி' என்ற மீம் ஸ்டிக்கர் தான் நினைவுக்கு வருகிறது.

இப்படி படம் முழுவதும் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் உடன் இருக்கும் காட்சிகள் இருக்கின்றன. படம் ஓடிடியில் வெளியான பின்னர் மீம் கிரியேட்டர்களுக்கு வேலை அதிகமாக உள்ளது எனக் கூறலாம்


Click it and Unblock the Notifications











