பாதியில் நிறுத்தப்பட்ட குட் பேட் அக்லி.. தியேட்டரில் நடந்த சம்பவம்.. பெண்ணின் தலையிலேயே விழுந்த கட்டை
சென்னை: அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் குறித்த தகவல்கள் தான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படம் குறித்த விமர்சனங்கள் மோஸ்ட்லி பாசிட்டிவாக இருப்பதால், படத்தைப் பார்க்கும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் குட் பேட் அக்லி படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குட் பேட் அக்லி படம் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில், அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1000 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் ஆனது. முதல் நாளில் மட்டும் படம் சுமார் 30.9 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதுவும், இந்த வசூல் தமிழ்நாட்டில் மட்டும்தான்.

வார இறுதி நாட்கள் என்பதால் இன்றும் நாளையுமே பெரும்பாலான தியேட்டர்களில் படத்திற்கான 90 சதவீத டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் ரசிகர்களுக்கு படம் பிடித்துவிட்டதால், அஜித்தும் செம குஷியில் உள்ளார். இந்நிலையில் குட் பேட் அக்லி படம் திரையிடப்பட்ட தியேட்டரில் நடைபெற்ற சம்பவத்தால், படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பெண்ணுக்கு காயம்: அதாவது படம் திரையிடப்பட்டு படம் ஓடிக்கொண்டு இருந்துள்ளது. இந்நிலையில், தியேட்டரின் மேற்கூரையில் இருந்து கட்டை ஒன்று படம் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் மீது விழுந்துள்ளது. இதனால், அந்த பெண்ணுடன் வந்தவர்கள், திரையரங்க நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கட்டை விழுந்ததில், பெண்ணின் தலையில் அடிபட்டுள்ளது. இதனால் காயம் பட்ட பெண்ணை உடனே, அருகில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். பிரச்னை ஏற்பட்டதுமே குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் சென்றதால், உடனே தியேட்டர் வளாகத்திற்கு வந்தவர்கள், வாக்குவாதத்தை நிறுத்தி வைத்தனர்.

பாதியில் நிறுத்தப்பட்ட படம்: அடிபட்ட பெண்ணுடன் வந்தவர்கள் தியேட்டர் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் இந்த பிரச்னை முடிந்த பின்னர் படம் திரையிடப்பட்டுள்ளது. தியேட்டரில் சவுண்ட் அதிகம் வைத்ததால் மேற்கூரையில் இருந்த கட்டை விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த பிரச்னை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் படம் தொடர்ந்து திரையிடப்பட்டது.

தர்ம அடி: ஏற்கனவே குட் பேட் அக்லி படம் திரையிடப்பட்ட தியேட்டரில், படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர், தியேட்டரில் டி.வி.கே என கத்தியதால், விஜய் ரசிகருக்கு அஜித் ரசிகர்கள் தர்ம அடி கொடுத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் கூட விஜய் ரசிகர்கள் இது போல பல இடங்களில் அடிவாங்க எதிர்காலத்தில் வாய்ப்புகள் அதிகம் என பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











