Good Bad Ugly: குட் பேட் அக்லி செகண்ட் லுக் போஸ்டர் படைத்த உலக சாதனை! உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

சென்னை: தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரங்களை அதிகம் கொண்டாடும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளது. எத்தனையோ முன்னணி நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இப்போதும்கூட யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் தான் வளர்ந்து வந்த காலத்திலேயே நெகடிவ் ரோல்களைத் தேர்ந்தெடுத்து அதில் ஹிரோயிசம் காட்டி தமிழ் சினிமாவின் திசை வழிப்போக்கையே மாற்றியவர் நடிகர் அஜித்குமார். அஜித்குமாரை மாஸான நெகடிவ் ரோல்களைப் பார்த்துப் பழகிய அவர்களது ரசிகர்களுக்கு இப்போதுவரை ட்ரீட் கொடுத்துக் கொண்டுதான் உள்ளார்.

அஜித் படங்கள் மீது பொதுவாக வைக்கப்படும் விமர்சனங்கள் ஒன்று நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பார் இல்லையென்றால் போலீஸாக நடிப்பார் என்பதுதான். ஒரு மாஸான ஹீரோவாக உருவான பின்னர் அஜித் இப்போதும் நேர்கொண்ட பார்வை போன்ற சமூகக் கருத்து பேசும் படங்களில் நடித்து வருகின்றார். இதுமட்டும் இல்லாமல் இவர் வளர்ந்து வந்த காலங்களில் அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே (படத்தின் திரைக்கதை அவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும்) போன்ற பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற படங்களிலும் நடித்து அசத்தியிருந்தார்.

Ajithkumar Good Bad Ugly

அதன் பின்னர் மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வரத்தொடங்கிய பின்னர் தனக்கு ரசிகர்கள் கொடுத்த அல்டிமேட் ஸ்டார் என்ற புனைப்பெயரை வேண்டாம் எனக் கூறினார். எந்த நடிகருமே செய்யத் தயங்கும் விஷயமான தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்தார். அதன் பின்னரும் அவருக்கு ரசிகர்கள் தல என அழைத்து வந்தனர். அதனையும் அவர் வேண்டாம் எனக் கூறிவிட்டு தற்போது வெறும் அஜித்குமாராக மட்டுமே வலம் வருகின்றார். அப்படி இருந்தும் இவரது முந்தைய படம் சரியாகப் போகவில்லை என்றாலும் அடுத்த படத்திற்கு மாஸ் ஓப்பனிங் இவரது ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

Ajithkumar Good Bad Ugly

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்: ஒரு கட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்துவந்த அஜித்குமார் தற்போது ஒரு ஆண்டுக்கு ஒரு படம் என நடித்து வருகின்றார். இந்நிலையில் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகின்றார் என்பதே அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரெடக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் விடாமுயற்சி படத்திலும் மைத்ரி புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகின்றார்.

தனி எதிர்பார்ப்பு: குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பு வந்ததுமே படத்தின் பெயருக்காக இந்த படத்தின் மீது தனி எதிர்பார்ப்பே ஏற்பட்டது. அதன் பின்னர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி பிரமாண்டமான வரவேற்பைப் பெற்றது. இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தின் இறுதியில் குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றது.

Ajithkumar Good Bad Ugly

தனி சாதனை: தற்போது அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கும் அஜித்குமார் ஜீலை 1ஆம் தேதி தனது சொந்த காரணத்திற்காக சென்னை திரும்பவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் நேற்று முன்தினம் அதாவது ஜூன் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. காட் பிளஸ் யூ மாமே என்ற டைட்டிலுடன் வெளியிடப்பட்ட் இந்த போஸ்டர் தற்போது மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Ajithkumar Good Bad Ugly

தேங்க்ஸ் மாமே: அதாவது, போஸ்டர் வெளியிடப்பட்டு 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் இருந்து எக்ஸ் தளத்தில் அதிகமானோர் பார்த்த மூவி போஸ்டர் என்ற சாதனையைப் படைத்துள்ளது. அதாவது குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது போஸ்டரை 62 மில்லியனுக்கும் அதிகமானோர் 24 மணி நேரத்தில் பார்த்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. மேலும் ரசிகர்களுக்கு நன்றி கூறும் விதமாக தேங்க்ஸ் மாமே எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X