GBU Teaser: சம்பவம் லோடிங் மாமே.. தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான்.. குட் பேட் அக்லி டீசர் ரிலீஸ் தேதி

சென்னை: அஜித் குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக சரியாகப் போகவில்லை. அதற்கு காரணம், படத்தை ரசிகர்கள் புரிந்து கொண்ட விதமும், இயக்குநர் கூறியதை மனதில் கொள்ளாததுமே முக்கிய காரணம். அதாவது, படத்தில் மாஸ் காட்சிகள் என ஒரு காட்சி கூட இருக்காது. ஆனால் படம் செம க்ளாஸாக இருக்கும் என உறுதி அளித்தார். அவர் கூறியது போல் படம் செம க்ளாஸாக இருந்தது. ஆனால் மகிழ் கூறியதை புரிந்து கொள்ளாத அல்லது தெரியாத ரசிகர்கள் விடாமுயற்சி படத்தைப் பார்த்து பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இப்படியான நிலையில், படம் ரசிகர்களை கவராததால், வசூலிலும் அடிபட்டது. இதனால் வசூல் ரீதியாக தோல்வி படமாக மாறியது. ஆனால் உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் படம் பாராட்டுகளை இப்போதுவரை குவித்து வருகிறது.

Ajithkumar Good Bad Ugly Teaser GBU Teaser

டீசர்: அஜித் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குட் பேட் அக்லி. பெரும் எதிர்பார்ப்பினை படம் அறிவிப்பில் இருந்து ஏற்படுத்தியுள்ள இந்த படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்து, விடாமுயற்சி படத்தால் ஏப்ரலுக்கு தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் படத்தின் புரோமோஷன்களை படக்குழு இப்போது இருந்தே ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே த்ரிஷாவின் லுக் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் டீசர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவே அதிகாரப்பூர்வமாக சிறப்பு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Ajithkumar Good Bad Ugly Teaser GBU Teaser

ரிலீஸ் தேதி: ஏற்கனவே படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. காரணம், ஏப்ரல் 10ஆம் தேதி, அதையடுத்து சித்திரை முதல் தேதி, அடுத்த இரண்டு வாரத்தில் அஜித்தின் பிறந்த நாள் என்பதால், ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என படக்குழு திட்டமிட்டு படத்தை இந்த தேதியில் ரிலீஸ் செய்கிறது.

மகிழ்ச்சி: சில தினங்களுக்கு முன்னர் த்ரிஷாவின் லுக்கினை படக்குழு வெளியிட்டது. இப்போது, படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அடுத்து படத்தின் டீசர், அதையடுத்து படத்தின் முதல் பாடல், இரண்டாவது பாடல் என அப்டேட்களால் மார்ச் மாதமே நிறைய போகிறது. புஷ்பா 2வில் பண வேட்டையாடிய மைத்ரி மூவிஸ் இப்போது குட் பேட் அக்லி படத்தை உலக அளவில் டிரெண்ட் செய்யவும் கவனத்தை ஈர்க்கவும் எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் போனாலும் போகும் என்ற பேச்சும் திரையுலகில் அடிபடுகிறது. விடாமுயற்சி கொடுத்த வருத்தத்தில் இருந்து அஜித் ரசிகர்கள் மீண்டு வர குட் பேட் அக்லியின் அப்டேட்டுகள் அமையவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X