GBU Teaser: தல ரசிகர்களே ரெடியா இருங்க.. அஜித் டைம் குறிச்சுட்டாரு.. சம்பவத்த நீங்க பார்த்துக்கோங்க!

சென்னை: அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது என்ற தகவல் ஏற்கனவே படக்குழு கூறியதுதான். இந்த தகவல் இரண்டு நாட்களுக்கு முன்னரே கூறிவிட்டதால் ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் குட் பேட் அக்லி டீசர் என்ற ஹேஷ்டேக்கினை டிரெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நாளை எத்தனை மணிக்கு படத்தின் டீசர் வெளியாகும் என்ற தகவலையும் படக்குழு தெரிவித்துள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஏற்கனவே படக்குழு வெளியிட்ட டீசர் தொடர்பான அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக டீசர் அறிவிப்பு வீடியோவில் இடம் பெற்றிருந்த வீடு, மனி ஹைஸ்ட் வெப் சீரிஸில் இடம் பெற்றுள்ள வீடு என ரசிகர்கள் டீகோடிங் செய்து கண்டுபிடித்துவிட்டார்கள். இப்போது படத்தில் மனி ஹைஸ்ட் தொடர்பான எதாவது காட்சியோ, வசனமோ இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

Ajithkumar Good Bad Ugly Trisha

படத்திற்கு முதலில் இசை அமைக்க கமிட் ஆனவர், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான். ஆனால் அவருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரை படத்தில் இருந்து நீக்கியது, மைத்ரி மூவிஸ் நிறுவனம். அதன் பின்னர், படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நியமிக்கப்பட்டார். அவரும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்துடன் இணைவதால், தனது கெரியர் பெஸ்ட் இசையை படத்திற்கு அளிப்பேன் எனக் கூறினார். அதேபோல் இதுவரை படக்குழு வெளியிட்ட இரண்டு வீடியோக்களான த்ரிஷா அறிமுகம் செய்யப்பட்ட வீடியோ மற்றும் டீசர் அறிவிப்பு வீடியோக்களுக்கான பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Ajithkumar Good Bad Ugly Trisha

குட் பேட் அக்லி: மைத்ரி மூவிஸ் நிறுவனம் தாயாரித்துள்ள குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான ஏற்பாட்டுப் பணிகள் நடைபெறுகிறது. இப்படி இருக்கும்போது, படத்தின் டீசர் நாளை அதாவது பிப்ரவரி 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் நாளை மாலை 7.03 மணிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் டீசர் மொத்தம் 1 நிமிடம் 34 நொடிகள் உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

Ajithkumar Good Bad Ugly Trisha

டீசர்: இது தொடர்பான அறிவிப்பை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அப்டேட்டுக்காக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. தல டைம் குறிச்சுட்டாரு, சம்பவத்தை நாமா பார்த்துக்க வேண்டியதுதான் என உற்சாகமாக உள்ளார்கள். மேலும் இந்தத் தகவலை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். மேலும் நாளை இணையத்தில் குட் பேட் அக்லி தொடர்பான தகவல்கள்தான் டாப்பில் இருக்க வேண்டும் என்பதில் ரசிகர்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள்.

Ajithkumar Good Bad Ugly Trisha

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X