GBU Booking: ஸ்பெஷல் ஷோ கன்ஃபார்மா இருக்கு.. ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!
சென்னை: அஜித் குமார் நடிப்பில் அடுத்த வாரத்தில் அதாவது ஏப்ரல் 10 ரிலீஸ் ஆக உள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ள இந்த படத்தில், த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் ப்ரீ புக்கிங் நேற்று இரவே தொடங்கிவிட்ட நிலையில், ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு புக்கிங் செய்து வருகிறார்கள்.
குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களை அதகளப்படுத்தி உள்ளது. டிரைலரில் அஜித் பேசும் வசனங்கள் தொடங்கி, அவருக்கான ஃபிரேம்கள் என அனைத்தும் அட்டகாசம். அதுவும் டிரைலர் முழுவதும் வரும் ஒத்த ரூபாயும் தாரேன் பாட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. டிரைலரின் கடைசியில் வரும் சிம்ரன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ். அதேபோல், டிரைலரில் இடம் பெற்றுள்ள வசனங்கள் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

குறிப்பாக அஜித் பேசும் வசனங்களான, இருங்க பாய் மற்றும் சார் உங்க கார்டு மேல 16 நம்பர் இருக்கும் அதைக் கொஞ்சம் சொல்ல முடியுமா என்ற வசனங்கள் எல்லாம் வேற லெவல் வசனங்களாக உள்ளன. டிரைலர் இதுவரை சுமார் 6 மில்லியன் பார்வையாளர்களை 11 மணி நேரத்தில் கடந்துள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில், படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது. ப்ரீ புக்கிங்கைத் தொடங்கியதில் இருந்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் படத்திற்கு புக் செய்து வருகிறார்கள்.

ப்ரீ புக்கிங்: அதாவது ஏற்கனவே படத்திற்கு வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் நேற்று முதல் தொடங்கியது. படத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரம் ஸ்க்ரீன் களுக்கு மேல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் நேற்று இரவு தொடங்கிய நிலையில் முதல் நாள் காட்சிகளுக்கான பெரும்பான்மையான டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுவிட்டது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு காட்சி: இது மட்டும் இல்லாமல், ப்ரீ புக்கிங்கில் தியேட்டர்கள் சார்பில் அட்டவணை படுத்தப்பட்டுள்ள காட்சிகள் மற்றும் நேரங்களைப் பார்க்கும் போது படத்திற்கு சிறப்புக் காட்சிகள் இருக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது. காரணம், பெரும்பான்மையான தியேட்டர்களில் படத்தின் முதல் காட்சி காலை 11.30 மணிக்கு மேல்தான் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. எனவே படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசிடம் அனுமதி வாங்கி, திரையிடுவார்கள் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

வசூல்: மேலும், இதுவரை அட்டவணை படுத்தப்பட்டுள்ள காட்சிகளுக்கு ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு புக் செய்துள்ளார்கள். பெரும்பான்மையான தியேட்டர்களில் பல காட்சிகளுக்கான டிக்கெட்டுகளில் 99 சதவீதம் விற்றுத் தீர்ந்து விட்டது. படம் ப்ரீ புக்கிங்கில் தனிப்பட்ட முறையில் சாதனை படைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இது மட்டும் இல்லாமல், இன்னும் அண்டை மாநிலங்களில் படத்திற்கான ப்ரீ புக்கிங் தொடங்கப்படவில்லை. கேரளா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அதிகாலை 6 மணிக்கு திரையிட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே தீவிர ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி அண்டை மாநிலங்களுக்கு சென்று படம் பார்க்க திட்டமிடுவார்கள் என்பதால், முதல் நாளில் வசூல் வேற லெவலில் இருக்கப்போகிறது என்பது மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











