விஜய்யின் லியோ டிரைலரை ஓரம் கட்டிய.. அஜித்தின் குட் பேட் அக்லி டிரைலர்.. வேற லெவல் சாதனை!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்துடன், பிரபு, சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, த்ரிஷா என பலர் நடித்துள்ளார்கள். படம் இன்னும் நான்கு நாட்களில் வெளியாகவுள்ளதால் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் படத்தின் டிரைலர் சாதனை படைத்துள்ளது.

அதாவது, குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அதாவது படத்தின் முதல் அறிவிப்பான டைட்டிலில் இருந்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அடுத்தடுத்து அப்டேட்கள் என அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. இதில் படத்தின் டீசர் ரசிகர்களை உலக அளவில் கவர்ந்தது. டீசர் மட்டும் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, யூடியூப் தளத்தில் சாதனை படைத்தது. இதன் மூலம், 24 மணி நேரத்தில் அதிகமான பார்வைகளைக் கடந்த டீசராக இந்த டீசர் அமைந்தது.

Ajithkumar Good Bad Ugly Movie Trailer sets New Record In Tamil Cinema And Beats Vijay Leo

இது மட்டும் இல்லாமல், டீசரை ரசிகர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள் கண்டு களித்தார்கள். குறிப்பாக டீசர் ரிலீஸ் தினத்தையே, ரசிகர்கள் தியேட்டரை திருவிழா மைதானம் போல மாற்றிவிட்டார்கள். போதாகுறைக்கு படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்பதால், தியேட்டருக்கு சென்று, அவரும் ரசிகர்களுடன் டீசரைப் பார்த்துக் கொண்டாடினார். அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரப்படுத்தினர்.

Ajithkumar Good Bad Ugly Movie Trailer sets New Record In Tamil Cinema And Beats Vijay Leo

குட் பேட் அக்லி: இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. பாடல் வரிகள் அஜித்தை மனதில் வைத்து மாஸாக எழுதப்பட்டதால், ரசிகர்கள் கொண்டாடினர். இதனால், படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆரவாரமாக காத்துக் கொண்டிருந்த நேரத்தில், கடந்த 4ஆம் தேதி படத்தின் டிரைலரை படக்குழு ரிலீஸ் செய்தது.

Ajithkumar Good Bad Ugly Movie Trailer sets New Record In Tamil Cinema And Beats Vijay Leo

டிரைலர்: டீசரை கொண்டாடிய ரசிகர்களுக்கு டிரைலர் தீபாவளியாக மாறியது. டிரைலரில் இடம் பெற்ற அஜித்தின் முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ் எல்லாம் வேற லெவலில் இருந்தது. குறிப்பாக ஒத்த ரூபாயும் தாரேன் பாடல் இடம் பெற்றது எல்லாம் மாஸாக மாறிப்போனது. இப்படியான நிலையில் ரசிகர்களுக்கு இந்த டிரைலர் கட் மிகவும் பிடித்துப் போனது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் அது, சிம்ரன் இடம்பெற்றது.

Ajithkumar Good Bad Ugly Movie Trailer sets New Record In Tamil Cinema And Beats Vijay Leo

சாதனை: இந்நிலையில் டிரைலரை 24 மணி நேரத்தில் மட்டும் 32 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்த டிரைலர் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்னர் விஜய்யின் லியோ படத்தின் டிரைலர், 24 மணி நேரத்தில் 31 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருந்தது. இதன் மூலம் அதிக பார்வையாளர்களை கடந்த டிரைலராக லியோ இருந்தது. இப்போது முதல் இடத்திற்கு அஜித்தின் குட் பேட் அக்லி படம் வந்துள்ளது. இந்நிலையில் தற்போது டீசர் மற்றும் டிரைலரில் அதிக பார்வையாளர்களை கடந்த படங்கள் என்றால் அது அஜித்தின் குட் பேட் அக்லி படம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: ajithkumar good bad ugly vijay leo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X