என்னது குட் பேட் அக்லி 2 வருதா.. சுரேஷ் சந்திரா கொடுத்த அப்டேட்டால் ஏ.கே. ரசிகர்கள் மகிழ்ச்சி!

சென்னை: நடிகர் அஜித் தமிழ் சினிமா வட்டாரத்தில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடியவராக உள்ளார். இவர் தனது ரசிகர் நற்பணி மன்றத்தைக் கலைத்த பின்னரும்கூட இவருக்கான ரசிகர்கள் எக்கச்சக்கமாக இருந்து வருகின்றனர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. தற்போது அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். வழக்கமாக ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்தபடத்திற்கு கமிட் ஆகும் அஜித்குமார் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகின்றார்.

இயக்குநருடன் கருத்து வேறுபாடு: அஜித்திற்கும் விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் இடையே படம் தொடங்கிய நாட்களில் இருந்து சிறு சிறு கருத்து வேறுபாடு இருந்துள்ளது. ஒரு சில காட்சிகளில் அஜித் மிகப்பெரிய மாற்றம் செய்யும் அளவிற்கு திருத்தங்கள் கூறியதாகவும், ஒரு சில காட்சிகளில் அஜித்தின் நடிப்பில் திருப்தி இல்லாதபோது, மகிழ் திருமேனி மாற்றுக்கருத்து கூறியதாகவும் இது இருவருக்கும் இடையே மிகப்பெரிய விரிசலை உண்டாக்கியுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

Ajithkumar Good Bad Ugly

விடாமுயற்சி: இந்நிலையில் கடந்த 20ஆம் தேதியில் இருந்து அஜர்பைஜானில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. 20ஆம் தேதி சென்னையில் இருந்து அஜர்பைஜானுக்கு புறப்பட்டுச் சென்றார். நேற்று முன்தினம் கூட அஜர்பைஜானில் அஜித்குமார் ரேஸ் கார் ஓட்டும் வீடியோக்கள் வெளியானது. இந்நிலையில், இன்று அதாவது ஜூன் 24ஆம் தேதி அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டது தொடர்பான வீடியோக்கள் வெளியிடப்பட்டது. அந்த வீடிடோவில் ஏற்கனவே படக்குழு தரப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட விபத்துக் காட்சியின் தொடக்கம்ப்போல் தெரிகின்றது. வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அஜித் மற்றும் ஆரவ் காருக்குள் உள்ளனர். ரோப் மூலம் கட்டப்பட்ட கார் நாலாபுறமும் சுற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவியது.

Ajithkumar Good Bad Ugly

இதையடுத்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் 6 நிமிடங்களுக்கு மேலான ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அஜித்குமார் கடந்த ஜூன் 21ஆம் தேதி கார் ஒட்டியது தொடர்பானதுதான். துபாய் ஆர்டோம் எனப்படும் பிரபல கார் ரேஸ் மைய்யத்தில் சுமார் 220 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாகச் செல்லும் அஜித்குமார் கண்ணில் கொஞ்சம் கூட பயமில்லாமல் காரை ஓட்டுகின்றார். மேலும் துபாயில் உள்ள கார் ரேசர்களிடம் உரையாடலிலும் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவியது.

Ajithkumar Good Bad Ugly

புதி அப்டேட்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, விடாமுயற்சியின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்றுள்ள அஜித்குமார், அங்கு சண்டைக் காட்சிகளில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அஜித்குமாரின் மேனேஜர், சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் குட் பேட் அக்லி படம் குறித்த அப்டேட்டினை இன்று அதாவது ஜூலை 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் GBU 2 எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான அறிவிப்பாகக் கூட இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். சிலர் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பாக இருக்ககூடும் எனவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X