GBU: துப்பாக்கி சத்தம் எனக்கு தாலாட்டு.. 2வது சிங்கிள் ரிலீஸ்.. இதுலையும் அட்டாக் செய்யப்பட்ட விஜய்
சென்னை: அஜித்குமார் நடித்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படமான குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் சார்பில் ஏற்கனவே, டீசர் மற்றும் முதல் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படக்குழு படத்தின் இரண்டாவது பாடலை லிரிக் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ரோகேஷ் எழுந்த, அனிருத் மற்றும் பால் டப்பா என இருவரும் இணைந்து பாடியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் அளவுக்கு இருப்பதால் பாடல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பாடல் வரிகளில் ’துப்பாக்கிச் சத்தம் எனக்கு தாலாட்டு பாட்டு, கத்திய உரசும்போது வரும் சத்தம் மெலோடி பீட்டு’ என இருப்பதால் இணையவசிகள் பலரும் இந்த வரி, விஜய்யை சீண்டுவதற்காகவும் விஜய் ரசிகர்களை சீண்டுவதற்காகவும் வைக்கப்பட்ட வரிகள் என கூறி வருகிறார்கள். ஏற்கனவே வெளியான முதல் பாடலில், ' துப்பாக்கி பிரங்கி மொத்தமா வந்தாலும் ஒத்தாள சம்பவம்டா’ என்ற வரிகள் இடம் பெற்றிருந்தது. அதுவே விஜய் மற்றும் விஜய் ரசிகர்களை சீண்டுவதற்காக வைக்கப்பட்ட வரிகள் என்ற பேச்சு இப்போது இணையவாசிகள் மத்தியில் உள்ளது.

படக்குழு: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித் குமாருடன், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம், மொத்தமாக தயாராகி ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. ரிலீஸ்க்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால், படத்தின் புரோமோசன் வேலைகளை படக்குழு தொடங்கிவிட்டது. அடுத்த வாரத்தில் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

இசை:ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தின் பின்னணி இசை மீதும் பாடல்கள் மீதும் ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. காரணம், பின்னணி இசையில் ஜி.வி. பிரகாஷ் குமார் எப்போதும் சம்பவம் செய்தே வந்துள்ளார். மேலும் இதுவரை வெளியான டீசர், முதல் பாடலில் மிரட்டிவிட்ட ஜி.வி. பிரகாஷ்குமார், இரண்டாவது பாடலிலும் மிரட்டி விட்டுள்ளார். பாடலை எழுதியுள்ள ரோகேஷ் பாடல் வரிகள் ஒவ்வொன்றொயும் பார்த்து பார்த்து எழுதியுள்ளார். குறிப்பாக பால் டப்பா பாடும் ராப் போர்ஷன் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதைப்போல் உள்ளது.

சாதனை: ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டு கேட்டு டீசரைப் பார்த்தார்கள். இது மட்டும் இல்லாமல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளார்களைக் கடந்த டீசர் குட் பேட் அக்லி படத்தின் டீசர் தான் என்ற சாதனையையும் படைத்தது. டிரைலர் வெளியாகும்போது குட் பேட் அக்லி படம் இது போன்ற சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரின் தீவிர ரசிகர் என்பதால் இந்த படத்தை பார்த்து பார்த்து, ஃபேன் பாய் சம்பவமாக உருவாக்கியுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த வாரத்தில் குட் பேட் அக்லி படத்தின் எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது. அதற்கு காரணம் அஜித்தின் அறிவுரை மற்றும் உத்தரவுதான் காரணம் என கூறப்படுகிறது. அதாவது, இந்த வாரத்தில் கடந்த 27ஆம் தேதி விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் நடிப்பில் வீர தீரன் சூரன் பாகம் இரண்டு படம் ரிலீஸ் ஆனது. எனவே, வீர தீர சூரன் பாகம் 2 படத்தின் ரிலீஸ் வாரத்தில், படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்களை எதாவது வெளியிட்டால், மக்களின் கவனம் குட் பேட் அக்லி படத்தின் மீது சென்றுவிடும். எனவே வீர தீர சூரன் பாகம் 2 படம் ரிலீஸ் ஆன பின்னர் படத்தின் அப்டேட்களைக் கொடுக்கச் சொல்லியுள்ளார்.
அதனால்தான் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட், வீர தீர சூரன் பாகம் 2 படம் வெளியான பின்னர் அப்டேட் கொடுக்கப்பட்டு இன்று, பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அஜித் இவ்வாறு சொல்லக் காரணம், அஜித்திற்கு விக்ரம் மிகவும் பிடிக்கும் என்றும், விக்ரம் தன்னைப்போல் சினிமாவில் மிகவும் சிரமப்பட்டு முன்னேறி வந்தவர் என்பதாலே விக்ரம் மீது அஜித்துக்கு எப்போதும் தனி மதிப்பும் ப்ரியமும் இருக்கிறது என கூறப்படுகிறது.
அஜித்குமாரின் கடைசி படமான விடாமுயற்சி படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேநேரத்தில் வசூலில் மிகப்பெரிய தோல்விப் படமாக மாறியது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கினார். லைகா நிறுவனம் தயாரித்தது. படத்தின் தோல்விக்கு காரணம், படத்தில் அஜித்திற்கு மாஸான காட்சிகள் எதுவும் இல்லை என்பதுதான் என ரசிகர்கள் தரப்பில் பேசிக் கொள்கிறார்கள். அதேபோல் படத்தின் கதை மிகவும் தட்டையாக இருப்பதாகவும், அஜித் படம் போலவே இல்லை எனவும் ரசிகர்கள் விமர்சித்தனர்.
இதனாலே என்னவோ படத்தை முதல் நாள் பார்ப்பதற்கே பல தியேட்டரில், ரசிகர்கள் குறைவாக இருந்தார்கள். இப்படியான நிலையில், படம் முதல் வாரம் முடிந்து இரண்டாவது வாரத்திலேயே பல தியேட்டர்களில் இருந்து எடுக்கப்பட்டது. இது அஜித் ரசிகர்களுக்கே பெரிய வருத்தத்தைக் கொடுத்தது. இப்படியான நிலையில் நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படமான குட் பேட் அக்லி படத்தின் மீது ரசிகர்கள் பெரும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளார்கள். படத்தின் சார்பில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டுகள் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே படத்தின் மீது ரசிகர்கள் பெரிய அளவில் நம்பிக்கையில் உள்ளார்கள்.
குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன், ஷாலினி உள்ளிட்டோர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல காட்சிகள் அஜித்தின் முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ்களால்தான் நிரம்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் தனது கெரியர் பெஸ்ட்டைக் கொடுக்க வேண்டும் என தீவிரமாக இசையமைத்துள்ளார் எனவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் பேசப்படுகிறது. மொத்தத்தில் படம் வெளியாக இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால் ரசிகர்கள் அஜித்தைக் கொண்டாட தயாராகிக் கொண்டு உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











