போடு வெடிய! குட் பேட் அக்லி படத்தில் நடிப்பு அரக்கன்? சூசகமான பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது மோஸ்ட் வாண்டட் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய எஸ்.ஜே. சூர்யா, அதன் பின்னர் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என தொடர்ந்து சினிமாவில் பல்வேறு தளங்களில் கால் பதித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை கவனத்தில் வைத்து நடித்து வரும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் தற்போது இந்தியன் 2, ராயன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன. இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யா, அஜித் நடிப்பில் உருவாகிவரும் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. இதற்கு அவரே பதிலும் அளித்துள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழ் சினிமாவில் தற்போது நடிப்பு அரக்கன் என பெயர் பெற்று அதற்கு தான்தான் பொருத்தமானவன் என்பதை படத்திற்கு படம் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றார் எஸ்.ஜே. சூர்யா. வில்லனாக நடித்து அதில் கதாநாயகனை ஓவர்டேக் செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கும் நடிகராக வலம் வருகின்றார். இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தனது சினிமா அனுபவங்கள் பலவற்றை பகிர்ந்துள்ளார்.

இந்தியன்2: அதில், "நான் முதலில் ஷங்கர் சாரின் கேம் சேஞ்சர் படத்தில்தான் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். அந்த படத்தில் நான் நடித்ததைப் பார்த்துவிட்டு இந்தியன் 2 படத்தில் என்னை நடிக்கச் சொன்னார். நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதற்கு முக்கியமான காரணம் எனது கதாபாத்திரத்தின் பெயர்தான். ட்ரைலரில் இரண்டு ஷாட்டுகள் மட்டுமே வந்திருந்தாலும் ரசிகர்கள் இந்த அளவிற்கு எனக்கு வரவேற்பு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இந்த வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
8 கோடி ரூபாய் வீடு: இந்தியன் 2 படத்தில் நான் திரையில் வரும் நேரம் மிகக் குறைவு என்றாலும் ரசிகர்களுக்கு திருப்திகரமாக இருக்கும். இந்தியன் 3 படத்தில் எனக்கு அதிக நேரம் இருக்கின்றது. எனவே ரசிகர்கள் யாரும் டிஸ்அப்பாய்ன்மெண்ட் ஆகிவிடாதீர்கள். இந்தியன் 2 படத்தில் நான் தங்கியிருக்கும் வீடு செட்டின் விலை மட்டும் ரூபாய் 8 கோடி எனத் தெரிவித்துள்ளார்.

குட் பேட் அக்லி: அதேபோல் இவரது நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். படம் 100 கோடி வசூல் செய்ததால் ஆதிக் ரவிச்சந்திரன் 100 கோடி வசூல் கிளப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து இவரது இயக்கத்தில் உருவாகிவரும் படம் குட் பேட் அக்லி. அஜித் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாந்த் இசை அமைக்கின்றார். இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யாவிடம் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கின்றீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, " இந்த கேள்விக்கு நான் இப்போது எதுவும் சொல்ல முடியாது. நடந்தால் நல்லாதான் இருக்கும்" என சிரித்துக்கொண்டே பதில் அளித்துள்ளார்.

மகிழ்ச்சியில் ரசிகர்கள்: அஜித்துக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்தால் சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் 12ஆம் தேதியும் ராயன் படம் வரும் 26ஆம் தேதியும் ரிலீஸ் ஆகின்றது. மூன்று வார இடைவெளியில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவதால் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.



Click it and Unblock the Notifications











