GBU: குட் பேட் அக்லி டீசர்.. தமிழ்நாட்டில் தியேட்டரில் ரிலீஸ்.. உங்க ஊர் தியேட்டர் லிஸ்ட்ல இருக்கா?

சென்னை: அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள 63வது படம். மேலும் இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டு உள்ளார்கள். மைத்ரீ மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் இன்று அதாவது பிப்ரவரி 28ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால், தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்களில் டீசரை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.

அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் பெரிய அளவில் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. காரணம் படத்தில் அஜித்திற்கு என மாஸான காட்சிகள் இல்லை என்பதுதான் பெரிய குற்றச்சாட்டு. இப்படியான நிலையில் பலரது எதிர்பார்ப்பும் குட் பேட் அக்லி படத்தின் மீது திரும்பியுள்ளது. காரணம், படத்தின் முதல் அறிவிப்பில் இருந்து கடைசியாக படக்குழு வெளியிட்ட அப்டேட் வரை அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Ajithkumar Good Bad Ugly Trisha

கிரீடம் படத்திற்கு பின்னர் அஜித் படத்திற்கு சுமார் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு எனது கெரியர் பெஸ்ட் இசையை கொடுப்பேன் என அவர் கூறியுள்ளார். இப்படியான நிலையில், இதுவரை படக்குழு சார்பில் வெளியிடப்பட்ட இரண்டு வீடியோக்களுக்கும் ஜி.வி.யின் இசை பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

டீசர்: படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் டீசர் இன்று அதாவது பிப்ரவரி 28ஆம் தேதி மாலை 7.03 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படியான நிலையில் ரசிகர்கள் உலகம் முழுவதும் ஆவலாக காத்துக் கொண்டு உள்ளார்கள். இது மட்டும் இல்லாமல், டீசரை தியேட்டர்களில் வெளியிட தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.

ரோகிணி, கமலா: இது தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்ற குறிப்பிட்ட சில தியேட்டர்களில் மட்டும் டீசர் வெளியிடப் படவுள்ளது. அதாவது சென்னையில், கமலா சினிமாஸ், ரோகிணி தியேட்டர், வெற்றி தியேட்டர்களிலும், திருச்சியில் லா சினிமாஸிலும் டீசர் வெளியிடப் படவுள்ளது. வேலூரில் அலங்கார் சினிமாஸிலும், திருவண்ணாமலையில் உள்ள சக்தி சினிமாஸிலும் கும்பகோணத்தில் உள்ள வாசு தியேட்டரிலும் டீசர் திரையிடப்படவுள்ளது.

ராம் சினிமாஸ்: அதேபோல், மதுரையில் உள்ள சோலைமலை சினிமாஸ் மற்றும் சினி பிரியா திரையங்கிலும், திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸிலும், திண்டுக்கல்லில் உள்ள உமா ராஜேந்தர் சினிமாஸிலும் டீசர் திரையிடப்படவுள்ளது. தியேட்டரில் டீசர் வெளியாவது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. எனவே டீசரைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டும் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள். இந்தத தகவல் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X