GBU: குட் பேட் அக்லி டீசர் அப்டேட்டில் அர்ஜுன் தாஸ், பிரசன்னா.. இதை கவனிச்சீங்களா? கொளுத்துவோமா மாமே!
சென்னை: எக்ஸ் பக்கத்தில் நுழைந்தாலே குட் பேட் அக்லி படத்தின் டீசர் அப்டேட் குறித்த தகவல்கள் தான் நிறைந்து கிடக்கிறது. விடாமுயற்சி படம் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மாஸான காட்சிகள் இல்லை என்ற வருத்தத்தில் இருந்த போது, குட் பேட் அக்லி குறித்த அப்டேட் ரசிகர்களை பெருமளவிற்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் படக்குழு நேற்று அதாவது, பிப்ரவரி 25ஆம் தேதி குட் பேட் அக்லி டீசர் அப்டேட்டை வெளியிட்டனர். அவர்கள் வெளியிட்ட வீடியோவில், அஜித், பிரசன்னா மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் உள்ளார்கள். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் முதல் தமிழ் படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் முதல் அறிவிப்பு வந்ததில் இருந்தே ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு வந்துவிட்டது. காரணம் படத்தின் டைட்டில் மற்றும் படத்தின் இயக்குநர். குட் பேட் அக்லி படத்தை இயக்கியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன் தீவிரமான அஜித் ரசிகர் என்பதால் படத்தில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் காட்சிகளை வைத்துள்ளார்கள் என கூறப்படுகிறது.

குட் பேட் அக்லி: படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்து வருகிறது. இதனால் ரசிகர்கள் படம் குறித்த அப்டேட்டுகளை உலக அளவில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது, படத்தின் டீசர் அப்டேட் நேற்று வெளியிடப்பட்டது. டீசர் வரும் 28ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் பலரும் கொண்டாட்ட மனநிலைக்கு இப்போதே வந்துவிட்டார்கள். இதுவரை படக்குழு தரப்பில் இருந்து இரண்டு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு வீடியோக்களுக்கும் பின்னணி இசையில் வேற லெவல் சம்பவம் செய்து வைத்துள்ளார் ஜி.வி.

டீசர்: மேலும் படம் குறித்த அப்டேட்டுகளை படக்குழு ஒருபுறம் வெளியிட்டு வந்தால், அதனைப் பகிர்ந்து ஜி.வி. பிரகாஷ் குமார் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தி வருகிறார். இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகம் அடைந்து வருகிறார்கள். நேற்று வெளியிடப்பட்ட டீசர் அப்டேட் வீடியோவில், அஜித் நடந்து வருவதும் , அவர் தலையை அசைப்பதும் என அவுட் ஆஃப் ஃபோகஸ் ஷாட்கள் இடம் பெற்றுள்ளது.

அர்ஜுன் தாஸ்: அதே நேரத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து ஏதோ பேசுவது போன்ற ஷாட்டும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அதில், தலையில் தொப்பி அணிந்து கொண்டும் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டும் இருப்பவர் பிரசன்னா. அதேபோல், அமர்ந்து இருப்பவர்களில் ஒருபுறம் கார்னரில் அர்ஜுன் தாஸ் அமர்ந்து உள்ளார்.

இது மட்டும் இல்லாமல் திரும்பி நின்று கொண்டு கையைக் கழுவிக் கொண்டு இருப்பவர், அஜித் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். எப்படியும் 28ஆம் தேதி மாலை தான் டீசர் வெளியாகும் என்பதால், அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளார்கள்.



Click it and Unblock the Notifications











