GBU Trailer: இன்னைக்கு சம்பவம் இருக்கு!.. ரசிகர்களே ரெடியா?.. GBU டிரைலர் ரிலீஸ்.. தல தரிசனம் உறுதி!

சென்னை: அஜித் குமார் நடிப்பில் அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் வெளியாக இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

படம் வெளியாக இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் படத்தின் டிரைலருக்கு காத்துக் கொண்டு உள்ளார்கள். ஏற்கனவே படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது மட்டும் இல்லாமல், படக்குழு வெளியிட்ட இரண்டு பாடல்களும் அஜித்தை கொண்டாடும் வகையில் இருப்பதால் ரசிகர்கள் படத்தை திரையில் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.

Ajithkumar Good Bad Ugly Trailer Release Today April 4th Fans are Happy

படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் என அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸ் செய்த படக்குழு, படத்தின் டிரைலர் குறித்து எதுவும் கூறாமல் கப்சிப் மோடில் இருந்ததால், ரசிகர்கள் அப்செட் ஆகிப் போனார்கள். எப்போது டிரைலர் அப்டேட் வரும் என காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இப்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பில் நேரம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த அப்டேட்டே ரசிகர்களை குஷி அடையச் செய்துள்ளது. ஏற்கனவே இன்று ரஜினிகாந்தின் கூலி படத்தின் அப்டேட் வெளியிடப்படவுள்ள நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்களும் அஜித் குமார் ரசிகர்களும் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளார்கள்.

டிரைலர்: அஜித் குமார் ரசிகர்கள் குட் பேட் அக்லி என்றும், ரஜினிகாந்த் ரசிகர்கள் கூலி என்றும் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். குட் பேட் அக்லி கடந்த ஒரு மாதமாகவே எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இப்போது படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்து விட்டதால், ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

Ajithkumar Good Bad Ugly Trailer Release Today April 4th Fans are Happy

முன்பதிவு: இன்று அதாவது ஏப்ரல் 4ஆம் தேதி, டிரைலர் ரிலீஸ் மட்டும் இல்லாமல், குட் பேட் அக்லி படத்திற்கான முன்பதிவு தொடங்கவுள்ளது. அதாவது, இன்று இரவு 8.02 மணிக்கு படத்தின் முன்பதிவு தொடங்கும் என ஏற்கனவே படக்குழு தெரிவித்திருந்தது. இதனால் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் புக் செய்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.

Ajithkumar Good Bad Ugly Trailer Release Today April 4th Fans are Happy

சாதனை: டிக்கெட் முன்பதிவு ஆர்வத்தில் ரசிகர்கள் இருந்தாலும், படத்தின் டிரைலர் அப்டேட்டுக்கு காத்துக் கொண்டுதான் இருந்தார்கள். இப்படியான நிலையில் இன்று படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு தெரிவித்து விட்டதால் ரசிகர்கள் இணையத்தில் பையர் விட்டுக் கொண்டு உள்ளார்கள். ஏற்கனவே வெளியான டீசரை 24 மணி நேரத்தில் 32 மில்லியன்கள் பார்த்து, தமிழ் சினிமாவில் சாதனை படைக்க வைத்தனர். இந்நிலையில் இந்த சாதனை மீண்டும் படைக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.

அஜித்: அஜித் நடிப்பில் ஏற்கனவே வெளியான விடாமுயற்சி படம் சரியாகப் போகவில்லை. படம் ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியான பிரேக் டவுன் என்ற படத்தின் ரீமேக் என்றாலும், இந்த படத்தில் அஜித்திற்கு என மாஸ் காட்சிகள் எதுவும் இல்லை. எனவே ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். இது படத்தின் வசூலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. படம் வசூலில் மிகப்பெரிய தோல்விப் படமாக மாறியது. படத்தை தயரித்த லைகா நிறுவனத்திற்கு இந்த படத்தின் மூலம் சுமார் 200 கோடிகள் வரை நஷ்டம் என கூறப்படுகிறது.

Ajithkumar Good Bad Ugly Trailer Release Today April 4th Fans are Happy

விடாமுயற்சி: முந்தைய படம் எவ்வளவு பெரிய தோல்விப் படமாக இருந்தாலும், அது அஜித்தின் அடுத்த படத்தை ஒருபோதும் பாதித்ததில்லை. காரணம், அவரது ரசிகர்கள். அதனால்தான் தமிழ் சினிமாவில் கிங் ஆஃப் ஓப்பனிங் என்ற பெயருடன் வலம் வருகிறார் அஜித். இது மட்டும் இல்லாமல், இந்த 2025ஆம் ஆண்டு அஜித்துக்கு மிகவும் ஸ்பெஷலான ஆண்டு என்றுதான் கூறவேண்டும். காரணம், இவரது இரண்டு படங்கள் முதல் நான்கு மாதத்தில் ரிலீஸ் ஆகிறது. மேலும் இவர் தொடங்கிய கார் ரேஸ் அணி, 24 மணி நேர கார் ரேஸில் கலந்து கொண்டு அதில் இரண்டு முறை மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்த காரணங்களாலே அஜித்திற்கு இந்த ஆண்டு மிகவும் ஸ்பெஷனான ஆண்டாக இருக்கும் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

ரசிகர்கள்: டிரைலர் வெளியீட்டின்போதே தமிழ்நாடு முழுவதும் உள்ள சில தியேட்டர்களில் ரசிகர்கள் திருவிழாவைப்போல் கொண்டாடிவிட்டார்கள். மதுரையைச் சேர்ந்த ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரம் வாங்கிக் கொண்டு தியேட்டருக்கே வந்துவிட்டார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால், அஜித் ரசிகர்களுக்காகவே இந்த படத்தை உருவாக்கியுள்ளார். அதற்காகத்தான் படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் சூட்டியுள்ளார்.

Ajithkumar Good Bad Ugly Trailer Release Today April 4th Fans are Happy

ஆதிக்: படத்தின் கதையை எழுதி இயக்கியது மட்டும் இல்லாமல், படத்தில் இடம் பெற்றுள்ள ஓ.ஜி. சம்பவம் பாடலையும் ஆதிக் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். இதுவரை படக்குழு தரப்பில் இருந்து வெளியான இரண்டு பாடல்களான ஓ.ஜி. சம்பவம் மற்றும் காட் பிளஸ் யூ மாமே பாடல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தாலும், ஓ.ஜி. சம்பவம் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் தனி வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த படம்: வரும் அக்டோபர் மாதம் வரை அஜித் குமார் தனது கார் ரேஸில் அதிக கவனம் செலுத்துவார் என்றாலும், அதன் பின்னர் யார் படத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. லிஸ்ட்டில், மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, வீரம், விஸ்வாஸம் ஆகிய படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, பில்லா மற்றும் ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணு வர்தன் என பெரிய பட்டியலே உள்ளது என பேசப்படுகிறது. இதற்கிடையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

Ajithkumar Good Bad Ugly Trailer Release Today April 4th Fans are Happy

பாராட்டு: குட் பேட் அக்லி படம் பார்த்த இந்திய சென்சார் துறை அதிகாரிகள் தொடங்கி அமெரிக்க சென்சார் துறை அதிகாரிகள் வரை பலருக்கும் படம் மிகவும் பிடித்துப்போயுள்ளது. இப்படி ஒரு அஜித்தை நாங்கள் இதுநாள் வரை பார்த்ததில்லை. இந்த படம் கட்டாயம் வெற்றி பெறும் என தணிக்கை குழுவினர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X