வலிமை.. பூஜை போட்ட கையோடு தல 60 டைட்டிலை வெளியிட்ட போனி கபூர்.. கொண்டாடும் ரசிகர்கள்!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Thala 60: தல 60 படத்தின் தலைப்பு வெளியானது

சென்னை: எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். போனி கபூர் தான் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

AJithkumar - H.Vinoth movie titled Valimai

ஆனால் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் பிஸியாக இருந்ததாலும், இந்த படத்திற்காக தன்னை தயார்ப்படுத்தி கொண்டிருந்ததாலும் சற்று தாமதமானது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித் இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. அதையொட்டியே படத்திற்கு வலிமை என பெயர் சூட்டியுள்ளனர்.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய அஜித்தின் சமீபத்திய படங்கள் அனைத்தும் 'V' எனும் எழுத்தில் தான் ஆரம்பித்தன. நேர்கொண்ட பார்வை மட்டும் இதற்கு விதிவிலக்காக அமைந்தது. தற்போது மீண்டும் 'V' எனும் எழுத்தில் தொடங்கும் வகையில் படத்திற்கு வலிமை என பெயர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X