ரஜினிக்கு விஜய்யை பிடிக்காது! அஜித்தை தான் பிடிக்கும்.. பிரபலத்தின் பேச்சுக்கு ப்ளு சட்டை பதிவு!
சென்னை: தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய் என இருவரும் சமகாலத்தில் சினிமாவிற்குள் காலடி எடுத்துவைத்தது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவிலேயே உச்சத்தில் உள்ள நடிகர்களாக உள்ளனர். இதில் அஜித் குறித்து பேசும்போது பெரும்பாலான நபர்கள் கூறுவது அஜித் சினிமாவில் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் வந்தது மட்டும் இல்லாமல், தன்னை ஒரு பெரிய ஸ்டாராக உயர்த்திக் காட்டியுள்ளார் என்பதாக இருக்கும். அதேநேரத்தில் விஜய்யை தொடக்க காலத்தில் உயர்த்தி விட அவருக்கு அவருடைய அப்பா இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இருந்தார் என்பதுதான்.
அதேபோல் தமிழ் சினிமாவில் தனக்கான எந்த பின்புலமும் இல்லாமல் தனது திறமையை மட்டும் நம்பி காலடி எடுத்துவைத்து இன்றைக்கு சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகின்றார். இந்நிலையில் வலைபேச்சு அந்தணன் ரஜினி குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பேசியதாக ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ளார்.

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அஜித்தைத்தான் பிடிக்கும். விஜய் தன்னை விட சினிமாவில் வளர்ந்து விட்டதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு விஜய்யைப் பிடிக்காது. மேலும் விஜய் தன்னைவிட உயரத்திற்கு சென்று விட்டார் என ரஜினிக்கு எரிச்சல் எனக் கூறியதாக ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
ப்ளூ சட்டை: இதனைப் பகிர்ந்தது மட்டும் இல்லாமல், ”சினிமாவுல மட்டும் தாண்டுனா பரவால்ல. அரசியலுக்கு வரப்போறேன்னு 25 வருசமா ஏமாத்தாம.. பொசுக்குன்னு வந்துட்டான். இவன் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றான்டா” என ரஜினி கூறுவதைப் போல் கேப்ஷனும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவிற்கு எதிராக ரஜினி ரசிகர்களும், ஆதரவாக விஜய் ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
முக்கிய காரணம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அஜித்தை மிகவும் பிடிக்க முக்கிய காரணமே ஏற்கனவே கூறியதைப்போல் தமிழ் சினிமாவில் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் வந்தார் என்பதாலே அஜித் மீது ரஜினிக்கு தனிப் பிரியம் உண்டு. மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டபோது, மேடையிலேயே, மிரட்டித்தான் இந்த விழாவிற்கு அழைத்தார்கள் என தைரியமாகப் பேசினார். இதற்கு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார். மேலும் தனது பில்லா படத்தின் ரீமேக்கினை அஜித் செய்தால் நன்றாக இருக்கும் என அஜித் கேட்டவுடனேயே, பில்லா படத்திற்கான ரீ மேக் உரிமைகளை ரஜினிகாந்த் ஏற்பாடு செய்து கொடுதார் எனவும் கூறப்பட்டது.
நடித்து வரும் படங்கள்: தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து கூலி படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார். அதேபோல் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். வேட்டையன் படம் அக்டோபர் மாதமும் விடாமுயற்சி படம் தீபாவளிக்கும் ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்படுகின்றது. மேலும் இந்த இரண்டு படங்களையும் லைக்கா புரெடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.


Click it and Unblock the Notifications











