Vidaamuyarchi: A.K.. கிங் ஆஃப் ஓப்பனிங்னா சும்மாவா .. விடாமுயற்சி ரிலீசால் தமிழ்நாடே அதிருதேப்பா!

சென்னை: அஜித்குமார் படம் ரீலீஸ் ஆகின்றது என்றாலே அவரது ரசிகர்கள் தியேட்டரை திருவிழாக் கோலமாக மாற்றிவிடுவார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது நடிப்பில் விடாமுயற்சி படம் இன்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால், படம் பார்க்க இரவில் இருந்து தியேட்டரில் ரசிகர்கள் குவிய ஆரம்பித்துவிட்டனர். இப்படியான நிலையில் தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் ரசிகர்கள் என்ன மாதிரி, கொண்டாடினார்கள் என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

அஜித்குமார் என்றாலே கிங் ஆஃப் ஓப்பனிங் என்று திரைத்துறையில் கூறுவார்கள், அதாவது அவரது படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். அதுவும் மற்ற நடிகர்களின் ரசிகர்களை காட்டிலும் அவருக்கு மாஸ் ஓப்பனிங் என்பது யாராலும் டச் செய்ய முடியாத ஒன்று. காரணம், அஜித்தின் முந்தைய படம் சரியாகப் போகவில்லை என்றாலும்கூட அடுத்த படத்திற்கு, முந்தைய படத்தை விட, மாஸான வரவேற்பினை ரசிகர்கள் கொடுப்பார்கள். அது ஒரு படம் என்றெல்லாம் இல்லை, தொடர்ந்து சில படங்கள் சொதப்பினாலும், அஜித்தின் ரசிகர்கள், அஜித் மீது வைத்துள்ள அன்பு என்றும் சொதப்பியது கிடையாது.

ajithkumar vidaamuyarchi fdfs vidaamuyarchi

ரோகினி: புக்கிங் தொடங்கியதில் இருந்து, சென்னை ரோகினி தியேட்டரில் மட்டும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதாக தியேட்டர் நிர்வாகமே, அறிவித்தது. படம் காலை 9 மணிக்குத்தான் முதல் காட்சியே திரையிடப்படுகிறது. அப்படி இருக்கும் போது, ரசிகர்கள் அதிகாலையில் முதலே தியேட்டரில் குவியத் தொடங்கி விட்டனர். அதற்கு முன்னதாக, தியேட்டரைச் சுற்றிலும், அஜித்துக்கு பேனர் வைத்துள்ளனர். காலையில் குவிந்த ரசிகர்கள் மேளதாளத்துடன், நடனமாடி பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ந்தனர். ரசிகர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் செயல்பட்டு வந்தாலும், சில ரசிகர்கள் காவல்துறையினரின் அறிவுரையைக் கேட்காமல் அலப்பறை செய்து வருகின்றனர்.

ajithkumar vidaamuyarchi fdfs vidaamuyarchi

அலங்கார்: அதேபோல் திருநெல்வேலியில் உள்ள மிகவும் பிரபலமான தியேட்டர்களில் ஒன்று, அலங்கார் சினிமாஸ். அங்கு நேற்று அதாவது பிப்ரவரி 5ஆம் தேதி மாலையே அஜித் ரசிகர்கள் ஒன்று கூடி, அஜித்தின் பாடல்களை ஒலிக்க விட்டு, நடனமாடி, வருகின்றனர். இது மட்டும் இல்லாமல், அஜித்திற்கு விஜயகாந்த்தின் பாடலான, " பொட்டு வெச்ச தங்கக்குடம்" பாடலையும் ஒலிக்கவிட்டு, கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ajithkumar vidaamuyarchi fdfs vidaamuyarchi

சேலம்: அதேபோல் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏ.ஆர்.ஆர். எஸ் தியேட்டர் வாசலில் நேற்று இரவு குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், வெடிகளை வெடித்து கொண்டாடினர். மேலும் சில ரசிகர்கள் தங்களது கைகளில் பட்டாசுகள் வெடித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இப்படி தமிழ்நாடு முழுவதும் விடாமுயற்சி படத்திற்கு பெரும் வரவேற்பும் மாஸ் ஓப்ப்னிங்கும் கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X