Vidaamuyarchi X Review: விடாமுயற்சி கிளியர் வின்னர்.. அஜித்தை விட த்ரிஷாதான் கெத்து.. எக்ஸ் விமர்சனம்
சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் ரிலீஸ் ஆகியுள்ள படம் விடாமுயற்சி. விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியதால் தமிழ்நாடு மட்டும் இல்லாமல், வெளிநாடுகளிலும் படத்திற்கு அதிக அளவில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாதி எப்படி உள்ளது என்பது குறித்து படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

விடாமுயற்சி படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு பெரும் திருப்தியைக் கொடுத்தது. அதிலும் குறிப்பாக, அஜித்தின் லுக், அஜர் பைஜானின் நிலப்பரப்பினை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என படக்குழுவினர் மெனக்கெட்டு உள்ளனர் என பலரும் பாராட்டினர். மேலும் அனிருத்தின் இசை குறித்து ரசிகர்கள் மத்தியில், நல்ல கருத்துகளே எழுந்தது. இப்படி இருக்கும்போது, படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்தினைத் தெரிவித்து வருகின்றனர்.

படத்தின் இடைவெளி காட்சி மிகவும் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஒரு ரசிகர் தனது எக்ஸ் பக்கத்தில், படத்தில் குறைந்த அளவிற்கே த்ரிஷா வந்தாலும் அவர் தான் படத்தில் கெத்தாக உள்ளார். நடக்கும் மொத்த பிரச்சனைக்கும் த்ரிஷாதான் காரணமாக உள்ளார் என பகிர்ந்துள்ளார்.

த்ரிஷா: அதேபோல், படம் பார்த்த, ரசிகர் ஒருவர், " படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி இன்னும் அருமையாக உள்ளது. படத்தின் கண்டெண்ட் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. மகிழ் திருமேனி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தை எடுத்துள்ளார். ஒரு நடிகராக அஜித் குமாருக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும். அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் சினிமா ரசிகர்களுக்கே இந்தப் படம் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. த்ரிஷாவின் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
திருப்திகரமான: "படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அனிருத்தின் இசை மற்றும் பின்னணி இசை காட்சிகளை மேலும் சுவார்ஸ்யம் ஆக்குகின்றது. இது அஜித்தின் முந்தைய படங்களைப் போல் இல்லாமல், முற்றிலும் வேறு ஒன்றாக உள்ளது. ஒரு முழுப் படமாக விடாமுயற்சி திருப்திகரமான படமாக உள்ளது. ஒளிப்பதிவு மற்றும் சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் லெவலுக்கு உள்ளது. விடாமுயற்சி படம், முழுவதும் வித்தியாசமான ஒரு தமிழ் படம் பார்ப்பதைப் போல் உள்ளது. படத்தை நல்ல தியேட்டரில் பாருங்கள்" என ஒரு ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இடைவேளை: படத்தின் இடைவேளை காட்சியும் , சண்டைக் காட்சிகளும் சிறப்பாக உள்ளது. அஜித்தின் நடிப்பு அட்டகாசமாக உள்ளது. அதே நேரத்தில், திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம். சில காட்சிகள் போர் அடிக்க செய்கின்றன. அனிருத்தின் வழக்கமான பின்னணி இசை இல்லை" என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் படத்துக்கு ஸ்டார் ரேட்டிங் எல்லாம் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











