Vidaamuyarchi: விடாமுயற்சி படம் பார்க்க வந்த அஜித் மேனேஜர்.. ரோகிணி தியேட்டரில் ராஜ வரவேற்பு!

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படம் இன்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தில் அஜித்துடன் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கிய இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டருக்கு வந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் ராஜ மரியாதை அளித்து வரவேற்றுள்ளனர். அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அஜித்தின் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 1000 ஸ்கீரீன்களுக்கு மேல் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படம் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை புக் செய்தனர். இதனால் புக்கிங் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே பெரும்பான்மையான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. இதில் சென்னை ரோகிணி தியேட்டரில் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களில், சுமார் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக ரோகிணி திரையரங்க நிர்வாகமே அறிவித்தது.

ajithkumar suresh chandra vidaamuyarchi

விடாமுயற்சி: சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான தியேட்டர்களில் ரோகினி தியேட்டரும் ஒன்று. இந்த தியேட்டருக்கு அதிகப்படியான ரசிகர்கள் வருவது மட்டும் இல்லாமல், பெரும்பாலான நடிகர்களும் நடிகைகளும் இயக்குநர்களும் ரசிகர்களுடன் படம் பார்க்க இந்தத் தியேட்டருக்கு தான் வருகிறார்கள். மிகப்பெரிய திரை, அதிகப்படியான ரசிகர்களை உள்ளடக்கும் இருக்கை வசதிகள் என பல வசதிகள் இந்த தியேட்டரிலும் உள்ளது.

ajithkumar suresh chandra vidaamuyarchi

சுரேஷ் சந்திரா: இப்படியான நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படத்தினைப் பார்க்க, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ரோகினி தியேட்டருக்கு வந்துள்ளார். ரோகிணி தியேட்டரில் அதிகாலையில் இருந்து ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக மேள தாளம், பட்டாசு, பூசணிக்காய் உடைப்பது, திருஷ்டி தேங்காய் உடைப்பது, ஆட்டம் பாட்டம் என ரோகிணி தியேட்டரே விழாக்கோலம் பூணடது. ரசிகர்களைக் கட்டுப்படுத்த காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் பேச்சைக் கேட்காமல் சில ரசிகர்கள் அலப்பறை செய்து கொண்டும்

ajithkumar suresh chandra vidaamuyarchi
வருகின்றனர்.

ராஜ வரவேற்பு: இப்படியான நிலையில்தான் படம் பார்க்க சுரேஷ் சந்திரா, ரோகினி தியேட்டருக்கு வந்துள்ளார். அவரை மேள தாளத்துடன் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். அவரைப் பார்த்ததும், ரசிகர்கர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க, போட்டி போட்டனர். ரசிகர்களின் கூட்ட நெரிசலிலும் அன்பிலும் சிக்கிக் கொண்ட சுரேஷ் சந்திரா குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. விடாமுயற்சி படம் கைவிடப்பட்டது என வதந்திகள் பரவியபோது, சுரேஷ் சந்திரா தான் அஜித் மற்றும் ஆரவ், படப்பிடிப்புத் தளத்தில் எதிர் கொண்ட, விபத்து குறித்த வீடியோவைப் பகிர்ந்து, இந்த அளவிற்கு உயிரைக் கொடுத்து பணியாற்றி வருகின்றோம். விடாமுயற்சி படம் கட்டாயம் ரிலீஸ் ஆகும் எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ajithkumar suresh chandra vidaamuyarchi

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X