Mankatha Booking: ரீ ரிலீஸ் மாதிரியே இல்லை.. FDFSக்கு டிக்கெட்டுக்கு போட்டி போடும் அஜித் வெறியர்கள்
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். இது அஜித்தின் 50ஆவது படமாக வெளியானது. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படத்தில் அர்ஜுன், ஆண்ட்ரியா, த்ரிஷா, வைபவ், பிரேம் ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் 2011ஆம் ஆண்டு வெளியானபோதே மிகப்பெரிய வெற்றியைக் குவித்தது. இந்நிலையில் படம் வரும் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான புக்கிங் நேற்று தொடங்கிய நிலையில் படம் திரையிடப்படும் பெரிய திரை கொண்ட தியேட்டர்களில் பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நாளுக்கான அனைத்து காட்சிகளுமக்குமான டிக்கெட்டுக்கள் அனைத்தும் கிட்டத்தட்ட முழுவதும் விற்றுத் தீர்ந்து விட்டது.
மங்காத்தா படத்தை ரீ ரிலீஸ் செய்யுங்கள் செய்யுங்கள் என்று அஜித் ரசிகர்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். குறிப்பாக அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி நெருங்கி வரும்போது அஜித் ரசிகர்கள் சார்பில் பல கோரிக்கைகள் எழுப்பப்படும். அப்படி இருக்கையில், பல ஆண்டு கால கோரிக்கை, வரும் வெள்ளிக்கிழமை நிறைவேற உள்ளது.

புக்கிங்: இந்நிலையில் படத்திற்கான புக்கிங் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதாவது, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காலை 9 மணி காட்சிக்கான பெரும்பாலான டிக்கெட்டுக்கள் விற்றுத் தீர்ந்து விட்டது. புக்கிங்கைப் பார்க்கும் போது படம் முதல் நாளிலேயே தமிழ்நாடு முழுவதும் எப்படியும் இதுவரையிலான ரீ ரிலீஸ் தமிழ் படங்களை காட்டிலும் அதிக வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள பிரபலமான தியேட்டர்களான ரோகிணி, கமலா, காசி, தேவி, காசினோ, சங்கம், ஈகா , வெற்றி போன்ற பெரிய பெரிய திரைகள் கொண்ட தியேட்டர்கள் அனைத்திலும் பெரும்பாலான டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகிவிட்டது. இதில் ரோகிணி தியேட்டரில் முதல் நாளுக்கான அனைத்து காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டது.

புதிய சாதனை: தமிழ் சினிமாவில் ஓபனிங் என்றாலே அது அஜித் தான் அஜித் ரசிகர்கள் தான். அது அஜித் வெற்றிப் படம் கொடுத்தாலும் அதுதான், தோல்விப் படம் கொடுத்தாலும் அதற்கு அடுத்த படத்திற்கும் அதே மாஸ் ஓபனிங் தான். இப்படி இருக்கும்போது, தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸிலும் மாஸ் ஓபனிங் என்ற வரலாற்றை வரும் வெள்ளிக்கிழமை அஜித் ரசிகர்கள் உருவாக்க உள்ளார்கள் என்பது புக்கிங்கை பார்க்கும் போது தெரிகிறது.


Click it and Unblock the Notifications











