Mankatha Day 2 Box Office: மங்காத்தா இரண்டாவது நாள் வசூல்.. தவிடுபொடியாகும் ரீ ரிலீஸ் ரெக்கார்டுகள்!
சென்னை: அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் மங்காத்தா. அவரது 50ஆவது படம். முதன் முதலாக அஜித் குமார் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த படம் இதுதான். இந்த படத்தில் இருந்துதான் அஜித் இந்த முடிவை எடுத்தார். அஜித்தின் 50ஆவது படமாக உருவான இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்களுக்கு கொஞ்சம் டவுட்டாகத்தான் இருந்தது. ஆனால் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தமிழ் சினிமா உலகில் ரீ ரிலீஸ் கலாச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த போது, அஜித் ரசிகர்கள் வைத்த ஒரே கோரிக்கை, மங்காத்தா படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்பதுதான். ரசிகர்களின் பல ஆண்டு கால கோரிக்கையை ஏற்ற படக்குழு நேற்று முன் தினம் அதாவது ஜனவரி 23ஆம் தேதி படத்தை ரீ ரிலீஸ் செய்தது. படத்தின் ரீ ரிலீஸ் தகவல் வெளியானதுமே அஜித் ரசிகர்கள் திருவிழா மோடுக்குச் சென்று விட்டார்கள் என்று தான் கூறவேண்டும்.

ரசிகர்கள் ஆர்வம்: இணையத்தில் முன் பதிவு தொடங்கியதும், ரசிகர்களின் ஆர்வம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவந்தது. அஜித்தின் 50ஆவது படமான மங்காத்தா படம் வெளியான போது இருந்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அப்படியே இருந்தது. படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் புதுப்படம் பார்க்க வந்தது போல, மேள தாளம், பட்டாசு, பால் அபிஷேகம், இது மட்டும் இல்லாமல் அஜித் கேம்பா விளம்பரத்தில் நடித்ததால், கேம்பா அபிஷேகமே நடைபெற்றது. பெரும்பான்மையான காட்சிகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்த ஹவுஸ் ஃபுல் காட்சிகளானது இன்றும் பல திரையரங்குகளில் புக் ஆகி உள்ளது.
வசூல் கணக்கு: படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூபாய் 4.5 கோடிகளும் இந்திய அளவில் ரூபாய் 5 கோடிகளும் வசூலித்ததாக தகவல்கள் வெளியானது. அதே போல் இரண்டு நாளில் படம் தமிழ்நாட்டில் ரூபாய் 8 கோடிகளும் உலக அளவில் ரூபாய் 8.5 கோடியில் இருந்து 9 கோடிகள் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











