Mankatha Re Release: கில்லி, படையப்பாவை தூக்கி சாப்பிட வரப்போகும் மங்காத்தா ரீ ரிலீஸ்.. கேப்டனே சொல்லிட்டாரு
சென்னை: தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் ஆவதும், அது கலெக்ஷனில் பிச்சுக்கிட்டு பல சாதனைகள் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. அண்மையில் ரீ ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டுக் கொண்டுள்ள படம் என்றால் அது படையப்பா தான். படையப்பா ரீ ரிலீஸில் ஃப்ரீ புக்கிங்கிலேயே சாதனைகளைப் படைத்தது. இப்படி இருக்கும்போது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் திரைத்துறையில் அதிகம் பேசப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் கிங் மேக்கர் என்று பதிவிட்டுள்ளார்.
அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த அஜித் படங்களில் ஒன்று அவரது 50வது படமான மங்காத்தா. கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைக் குவித்தது. மேலும் அந்த காலகட்டத்தில் இருந்து தான் வசூல் சாதனைகள் தான் வெற்றியைத் தீர்மானிப்பதாக பார்க்கப்பட்டது. அப்படி இருக்கும்போது, வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று, 100 நாட்களும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.
முன்னணி நடிகர்கள் பலரது படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படும் போது அஜித் ரசிகர்கள் அஜித்தின் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று தாராளமாக சொல்லலாம். இந்த படம் மட்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால், ரீ ரிலீஸ் படத்தையே நான்கு வாரங்கள் திரையரங்கில் அட்டகாசமாக திரையிடலாம் என்று திரையரங்க உரிமையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ரசிகர்கள் தரப்பில் மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும்.

பக்கா தியேட்டர் மெட்டீரியல்: ரசிகர்களும் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ்க்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அஜித்தின் நடிப்பும் அவரது கதாபாத்திரமும், அவருக்காகவே வெங்கட் பிரபு உருவாக்கிய காட்சிகளும், மொத்த ரசிகர்கள் பட்டாளத்தையும் ஆர்ப்பரிக்க செய்யும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் என மொத்த படமுமே பக்கா செலிபிரேஷன் மெட்டீரியல். இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்தால் தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களின் வசூல் சாதனை, ப்ரீ புக்கிங் சாதனை என அனைத்தையும் துவம்சம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
மங்காத்தா ரீ ரிலீஸ்: அஜித் ரசிகர்களை கடந்து மற்ற நடிகர்களின் வெறித்தனமான ரசிகர்களும் மங்காத்தா படத்தை கொண்டாடுவார்கள். இப்படி இருக்கும்போது, இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்திலோ ரீ ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு அவரது எக்ஸ் பக்கத்தில் கிங் மேக்கர் என்று பதிவிட்டுள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











